/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பிளக்ஸ் பேனர்கள் அகற்றம்; வாகன ஓட்டுநர்கள் நிம்மதி பிளக்ஸ் பேனர்கள் அகற்றம்; வாகன ஓட்டுநர்கள் நிம்மதி
பிளக்ஸ் பேனர்கள் அகற்றம்; வாகன ஓட்டுநர்கள் நிம்மதி
பிளக்ஸ் பேனர்கள் அகற்றம்; வாகன ஓட்டுநர்கள் நிம்மதி
பிளக்ஸ் பேனர்கள் அகற்றம்; வாகன ஓட்டுநர்கள் நிம்மதி
ADDED : மார் 11, 2025 09:33 PM

வால்பாறை; 'தினமலர்' செய்தி எதிரொலியாக, வால்பாறை நகரில் பல்வேறு இடங்களில் விதிமுறையை மீறி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டன.
வால்பாறையில், பல்வேறு கட்சிகளின் சார்பில் நடைபெறும் விழாக்களுக்கு ரோட்டில் பிளக்ஸ் பேனர் வைக்கபடுகின்றன. குறிப்பாக, அண்ணாசிலை, காந்திசிலை, ஸ்டேன்மோர் சந்திப்பு, புதிய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில், அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு பிளக்ஸ் பேனர்களை ரோட்டின் ஓரத்தில் ஆக்கிரமித்து வைக்கின்றனர்.
இதனால், இந்த வழியாக வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாவதோடு, ரோட்டில் நடந்து செல்பவர்களுக்கும் போதிய பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டது. இது குறித்து 'தினமலர்' நாளிதழில் கடந்த, 8ம் தேதி செய்தி வெளியிடப்பட்டது.
இதனை தொடர்ந்து, வால்பாறை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு, நகரில் விதிமுறையை மீறி வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்களை அகற்றினர். 'தினமலர்' செய்தி எதிரொலியால் பிளக்ஸ் அகற்றப்பட்டதால், பொதுமக்களும், வாகன ஓட்டுநர்களும் நிம்மதியடைந்தனர்.