/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இரவில் பூத்த நிஷாகாந்தி ஆவலுடன் ரசித்த மக்கள் இரவில் பூத்த நிஷாகாந்தி ஆவலுடன் ரசித்த மக்கள்
இரவில் பூத்த நிஷாகாந்தி ஆவலுடன் ரசித்த மக்கள்
இரவில் பூத்த நிஷாகாந்தி ஆவலுடன் ரசித்த மக்கள்
இரவில் பூத்த நிஷாகாந்தி ஆவலுடன் ரசித்த மக்கள்
ADDED : ஜூலை 24, 2024 01:47 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, ஜமீன்ஊத்துக்குளி பகுதியில் நள்ளிரவில் பூத்த நிஷாகாந்தி மலரை மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
'நைட் குயின்' என்று அழைக்கப்படும் நிஷாகாந்தி மலர்கள், 'கேக்டாசியஸ்' தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். ஆண்டுக்கு ஒரு முறை, இரவில் பூத்து, காலையில் வாடும் தன்மை கொண்டது.
இந்த மலர்கள், பொள்ளாச்சி நகரில், பல வீடுகளை அலங்கரித்து வருகிறது. ஜமீன்ஊத்துக்குளி, செல்லமுத்து நகரில் ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவரின் வீட்டில் நிஷாகாந்தி மலர்கள் பூத்தன. இதனை, அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
தற்போது, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் மிதமான காலநிலை நிலவுவதால் நிஷாகாந்தி மலர்கள், அதிகப்படியாக பூத்து வருவதும் தெரியவந்துள்ளது.