/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மகனிடமிருந்து சொத்துக்களை பறிமுதல் செய்த உத்தரவு ரத்து மகனிடமிருந்து சொத்துக்களை பறிமுதல் செய்த உத்தரவு ரத்து
மகனிடமிருந்து சொத்துக்களை பறிமுதல் செய்த உத்தரவு ரத்து
மகனிடமிருந்து சொத்துக்களை பறிமுதல் செய்த உத்தரவு ரத்து
மகனிடமிருந்து சொத்துக்களை பறிமுதல் செய்த உத்தரவு ரத்து
ADDED : ஜூலை 24, 2024 03:25 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம், மதினா வீதியைச் சேர்ந்த சவுகத் அலி மனைவி சுப்புஹானிபேகம், 58. இவர் தன் சொத்துக்களை நான்கு மகன்களுக்கும் இனாம் செட்டில்மென்ட் வாயிலாக வழங்கினார்.
இதில், இரண்டாவது மகன் முகமது பைசல்கான் சொத்துக்களை பெற்ற பிறகு தன்னையும், தன் கணவரையும் பராமரிக்காமல் கைவிட்டு விட்டார். இதனால் வாழ்வாதாரத்திற்கு சிரமப்பட்டு வருவதால் முகமது பைசல் கானுக்கு எழுதி வைத்த இனாம் செட்டில்மென்ட்டை ரத்து செய்து சொத்துக்களை மீட்டுத் தர வேண்டும் என, 2021ல் அப்போதைய கலெக்டர் சந்திரகலாவிடம் தாய் சுப்புஹாணி பேகம் மனு அளித்தார்.
விசாரித்த அதிகாரிகள் அறிக்கையின்படி, செப்., 2021ல் மகன் முகமது பைசல் கான் பெயரில் இருந்த இனாம் செட்டில்மென்ட் ஆவணத்தை ரத்து செய்த கலெக்டர் சந்திரகலா, அதற்கான நகலை தாய் சுப்புஹாணி பேகத்திடம் வழங்கினார்.
கலெக்டரின் உத்தரவை எதிர்த்து முகமது பைசல் கான் சார்பில் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி முரளி சங்கர், 'பெற்றோர் பெயரில் மேலும் சொத்துக்கள் உள்ள நிலையில் வாழ்வாதாரத்திற்கு வழியில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது. மகனிடம் இருந்து பறிமுதல் செய்து தாயிடம் வழங்கிய கலெக்டர் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பறிமுதல் செய்த சொத்துக்களை மீண்டும் மகனுக்கு வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.