/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பள்ளிகளுக்கு செல்லும் முன் இங்கே ஒரு 'விசிட்' அடிக்கலாம்! பள்ளிகளுக்கு செல்லும் முன் இங்கே ஒரு 'விசிட்' அடிக்கலாம்!
பள்ளிகளுக்கு செல்லும் முன் இங்கே ஒரு 'விசிட்' அடிக்கலாம்!
பள்ளிகளுக்கு செல்லும் முன் இங்கே ஒரு 'விசிட்' அடிக்கலாம்!
பள்ளிகளுக்கு செல்லும் முன் இங்கே ஒரு 'விசிட்' அடிக்கலாம்!

குழந்தைகள் போக்குவரத்து பூங்கா
பாலசுந்தரம் ரோடு, பி.ஆர்.எஸ்., மைதானத்தில் குழந்தைகள் போக்குவரத்து பூங்கா அமைந்திருக்கிறது. இங்கு, குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதியுடன், போக்குவரத்து விதிமுறைகளை குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கும் கட்டுமானங்கள் அமைந்துள்ளன. போக்குவரத்து சிக்னல்கள் செயல்படும் முறை, போக்குவரத்து விதிமுறைகள், போலீசார் செயல்படும் முறை போன்றவற்றை குழந்தைகள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
காஸ் வன அருங்காட்சியகம்
ஆர்.எஸ்.புரம் கவுலி பிரவுன் சாலையில், வனத்துறை அலுவலக வளாகத்தில் காஸ் வன அருங்காட்சியகம் அமைந்திருக்கிறது. 1902ல் துவங்கப்பட்ட இந்த நூற்றாண்டு கடந்த அருங்காட்சியகத்தில், இந்திய வனம் சார்ந்த 10 ஆயிரத்துக்கும் அதிகமான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மண்டல அறிவியல் மையம்
கொடிசியா சாலையில் அமைந்திருக்கிறது மண்டல அறிவியல் மையம். குழந்தைகள் விளையாடிக் கொண்டே அறிவியலைக் கற்றுக் கொள்ளலாம். இங்குள்ள விளையாட்டு உபகரணங்கள், இயற்பியல் விதிகளைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளன.