/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரூ.20,000 லஞ்சம் பெற்ற தீயணைப்பு அலுவலர் கைது ரூ.20,000 லஞ்சம் பெற்ற தீயணைப்பு அலுவலர் கைது
ரூ.20,000 லஞ்சம் பெற்ற தீயணைப்பு அலுவலர் கைது
ரூ.20,000 லஞ்சம் பெற்ற தீயணைப்பு அலுவலர் கைது
ரூ.20,000 லஞ்சம் பெற்ற தீயணைப்பு அலுவலர் கைது
ADDED : ஜூன் 08, 2024 01:55 AM

கோவை:தடையின்மை சான்று தர, 20,000 ரூபாய் லஞ்சம் பெற்ற தீயணைப்பு நிலைய அலுவலரை, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.
கோவை, சித்தாபுதூர், தனலட்சுமி நகர் விரிவு பகுதியைச் சேர்ந்தவர் கருப்புசாமி. இவர், குறிச்சி, சிட்கோ தொழிற்பேட்டை பகுதியில் கட்டடம் கட்ட, தீயணைப்பு நிலையத்திலிருந்து தடையின்மை சான்று பெற, கோவை புதுார் தீயணைப்பு நிலையத்தை அணுகினார். நிலைய அலுவலர் சிவராஜ், 20,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் கருப்புசாமி புகார் கூறினார்.
அவர்களது அறிவுறுத்தலின்படி, நேற்று மாலை, சிவராஜை தொடர்பு கொண்டுள்ளார். ரெயின்போ காலனி எதிரேயுள்ள பகுதிக்கு வருமாறு சிவராஜ் கூறியதன்படி, அங்கு சென்று 20,000 ரூபாயை சிவராஜிடம் கொடுத்தார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், சிவராஜை சுற்றி வளைத்து, கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரிக்கின்றனர்.