/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'நோ - பார்க்கிங்' பகுதியில் வாகனங்கள் நிறுத்தம் ;போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி 'நோ - பார்க்கிங்' பகுதியில் வாகனங்கள் நிறுத்தம் ;போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி
'நோ - பார்க்கிங்' பகுதியில் வாகனங்கள் நிறுத்தம் ;போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி
'நோ - பார்க்கிங்' பகுதியில் வாகனங்கள் நிறுத்தம் ;போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி
'நோ - பார்க்கிங்' பகுதியில் வாகனங்கள் நிறுத்தம் ;போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி
ADDED : ஜூன் 24, 2024 12:25 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகரில், 'நோ - பார்க்கிங்' பகுதியில் வாகனங்கள் நிறுத்தம் செய்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்களில், வாகனங்கள் நிறுத்தம் செய்ய போதிய பார்க்கிங் வசதிகள் இல்லை. வாகன ஓட்டுநர்கள், வாகனங்களை ரோட்டிலேயே தாறுமாறாக நிறுத்திச்செல்லும் நிலை உள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில், 'நோ - பார்க்கிங்' பகுதியில், வாகனங்கள் நிறுத்தம் செய்வதால் நெரிசல் ஏற்படுகிறது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பொள்ளாச்சி பகுதியில், 'நோ - பார்க்கிங்' பகுதிகள் என கண்டறிந்து அங்கு போலீசார், போர்டுகள் வைத்து வாகனங்களை நிறுத்தினால், அபராதம் விதிக்கப்படும் என அறிவித்தது. இதன் வாயிலாக பல இடங்களில், வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தம் செய்வதை கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அறிவிப்பு பலகை வைக்கப்பட்ட பகுதியிலேயே, தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தம் செய்யப்படுகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் உள்ளது.
மேலும், வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்களை நிறுத்தம் செய்ய போதிய வசதிகள் இல்லாததால், காலியாக உள்ள இடங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
எனவே, நோ பார்க்கிங் பகுதியில் வாகனங்கள் நிறுத்தாமல் இருக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிக நிறுவனங்கள், நான்கு மற்றும் இருசக்கர வாகனங்களை தனித்தனியாக நிறுத்த, வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.