/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரோட்டோரத்தில் வாகனங்கள் 'பார்க்கிங்'; ஓட்டுநர்கள் அதிருப்தி! ரோட்டோரத்தில் வாகனங்கள் 'பார்க்கிங்'; ஓட்டுநர்கள் அதிருப்தி!
ரோட்டோரத்தில் வாகனங்கள் 'பார்க்கிங்'; ஓட்டுநர்கள் அதிருப்தி!
ரோட்டோரத்தில் வாகனங்கள் 'பார்க்கிங்'; ஓட்டுநர்கள் அதிருப்தி!
ரோட்டோரத்தில் வாகனங்கள் 'பார்க்கிங்'; ஓட்டுநர்கள் அதிருப்தி!

* மின்கம்பத்தை அகற்றணும்!
கிணத்துக்கடவு, சிங்கராம்பாளையம் செல்லும் வழியில் ரோட்டோரத்தில் உள்ள பழைய மின்கம்பம் முறையாக அகற்றாமல் கிடக்கிறது. இதனால், ரோட்டில் செல்லும் சமூக விரோதிகள் சிலர் இதை எடுத்து செல்ல அதிக வாய்ப்புள்ளது. எனவே, மின்வாரியம் சார்பில் மின்கம்பதை அகற்ற வேண்டும்.
* பயன்படாத போர்வெல்
பொள்ளாச்சி, ஏ.நாகூர் பகுதியில் உள்ள போர்வெல்லில் தண்ணீர் உள்ளது. ஆனால் போர்வெல் மேல் பகுதி சேதம் அடைந்து சீரமைப்பு செய்யாமல் இருப்பதால், மக்கள் தண்ணீர் எடுக்க சிரமப்படுகின்றனர். எனவே, மக்கள் நலன் கருதி விரைவில் இந்த போர்வெல்லை ஊராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும்.
'பார்க்கிங்'கால் நெரிசல்
பொள்ளாச்சி, கோவை ரோட்டில் மகாலிங்கபுரம் வரை ரோட்டோரத்தில் அதிக அளவு வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யப்படுவதால், ரோட்டில் செல்லும் மற்ற வாகனங்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே, இதை தவிர்க்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செடிகள் அகற்றப்படுமா?
பொள்ளாச்சி - கோவை ரோட்டில், வடக்கிபாளையம் பிரிவு அருகே ரோட்டோரத்தில் அதிக அளவு செடிகள் வளர்ந்து ரோட்டை ஆக்கிரமிப்பு செய்யும் நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் ரோட்டோரத்தில் வாகனத்தை நிறுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரோட்டோரத்தில் உள்ள செடிகளை அகற்ற வேண்டும்.
மின்விளக்கு வசதி வேண்டும்
கிணத்துக்கடவு - கொண்டம்பட்டி செல்லும் ரோட்டில், ரயில்வே மேம்பாலத்தின் கீழ் இரவு நேரத்தில் செல்லும் போது, போதிய மின்விளக்கு வசதி இல்லாததால் வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.
* பணியை விரைவுபடுத்தணும்
உடுமலை தங்கம்மாள் ஓடையில் கால்வாய் கட்டும் பணி பாதியிலேயே நிற்கிறது. இதனால், தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகிறது. எனவே, நகராட்சியினர் இப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* புதரை அகற்றணும்
உடுமலை - பழநி ரோட்டில், ஸ்ரீ நகர் சந்திக்கும் பகுதியில், ஓடையில், செடிகள் வளர்ந்து புதர்மண்டிக்கிடக்கிறது. இதனால், கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. நோய் பரவும் அபாயம் ஏற்பட்டள்ளது. நகராட்சியினர் இந்த புதர், செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருட்டு பயம்
கணக்கம்பாளையம், எஸ்.வி., புரம், பி.வி லே-அவுட் பகுதியில் தெருவிளக்குகள் எரியாமல் உள்ளன. மாலையில் இருள் சூழ்ந்திருப்பதால், அப்பகுதி மக்கள் வெளியில் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். மேலும், அப்பகுதியில் போதிய பாதுகாப்பில்லாமல் இருப்பதால், இருளால் திருட்டு பயமும் ஏற்பட்டுள்ளது.
சுகாதார சீர்கேடு
உடுமலை, கொழுமம் ரோட்டில் சாலையோரம் குப்பைக்கழிவுகள் பல மாதங்களாக தேங்கியுள்ளது. அவ்வழியாக செல்லும்போது மிகுதியான துர்நாற்றம் வீசுவதுடன் கழிவுகளால் நோய்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும், கழிவுகள் காற்றில் பறந்து ரோடு முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது.
தெருநாய் தொல்லை
உடுமலை, பசுபதி வீதியில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் தொடர்ந்து கூட்டமாக கூடி பொதுமக்களை அச்சுறுத்துகின்றன. மேலும், குழந்தைகளை ரோட்டில் நடக்க விடாமல் அச்சுறுத்தி துரத்திகின்றன. இதனால் பொதுமக்கள் சாலையில் நிம்மதியாக நடக்க முடியாமல் உள்ளனர்.
கட்டடக்கழிவுகளை அகற்றணும்
உடுமலை, வ.உ.சி., வீதியில் கட்டடக்கழிவுகள் நீண்ட நாட்களாக அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது. அதிலிருந்து பரவும் மண் துகள்கள் அருகிலுள்ள குடியிருப்பு முழுவதும் நிரம்பியுள்ளன. மண் துகள் கழிவுகளால் குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுவதுடன், சுவாசப்பிரச்னை உள்ளவர்களும் அவதிக்குள்ளாகின்றனர்.