/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உடுமலை அருகே பெருங்கற்கால கல்வட்டங்கள் உடுமலை அருகே பெருங்கற்கால கல்வட்டங்கள்
உடுமலை அருகே பெருங்கற்கால கல்வட்டங்கள்
உடுமலை அருகே பெருங்கற்கால கல்வட்டங்கள்
உடுமலை அருகே பெருங்கற்கால கல்வட்டங்கள்
UPDATED : ஜூன் 11, 2024 04:28 AM
ADDED : ஜூன் 11, 2024 01:47 AM

உடுமலை;உடுமலை அருகே, பெருங்கற்கால கல்வட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளது. முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என, வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகா, சங்கராமநல்லுார், மடத்துார் பகுதியில், 20க்கும் மேற்பட்ட பெருங்கற்கால கல்வட்டங்கள் சிதிலமடைந்து காணப்படுகிறது.
இதனை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த, தொல்லியல் ஆய்வறிஞர் மூர்த்தீஸ்வரி, சிவக்குமார், அருட்செல்வன், பாலு உள்ளிட்டோர் மேற்பரப்பு ஆய்வு மேற்கொண்டனர்.
அவர்கள் கூறியதாவது:
ஆதிச்சநல்லுார், கொடுமணல் போன்று, இங்கு ஏராளமான இரும்பு எரிகற்களும், பெருங்கற்கால கல்வட்டங்கள் ஏராளமாக காணப்படுகிறது.
இதற்கு அருகில், ஐவர் மலை எனப்படும் அயிரை மலை இருப்பதும், பதிற்றுப்பத்து பாடல்களில், இப்பகுதிகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 'குவார்ட்ஸ்' எனப்படும் வெள்ளை நிற கற்கள் அதிகளவு காணப்படுவதால், அணிகலன்கள் உற்பத்தி தொழிற்சாலையாகவும் இருந்திருக்கலாம்.
மேலும், சுற்றிலும் உள்ள மடத்துார், மயிலாபுரம், அய்யம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில், ஏராளமான மூடுகற்கள், நிலத்தை உழும்போது தாழிகள், ஓடுகள் அதிகளவு கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில், தொல்லியல் துறை சார்பில், அகழாய்வு செய்தால், ஆயிரம் ஆண்டு பழமையான வசிப்பிடம் குறித்தும், ஏராளமான தொல்லியல் சான்றுகளும் கிடைக்க வாய்ப்புள்ளது.எனவே, இப்பகுதியில் மீதம் உள்ள கல்வட்டங்களை காப்பாற்றவும், மத்திய, மாநில தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.