/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஏணியிலிருந்து தவறி விழுந்து பெயின்டர் பலி ஏணியிலிருந்து தவறி விழுந்து பெயின்டர் பலி
ஏணியிலிருந்து தவறி விழுந்து பெயின்டர் பலி
ஏணியிலிருந்து தவறி விழுந்து பெயின்டர் பலி
ஏணியிலிருந்து தவறி விழுந்து பெயின்டர் பலி
ADDED : ஜூலை 25, 2024 12:06 AM
போத்தனூர்: சுந்தராபுரம் அடுத்து குறிச்சி, அழகு நகரை சேர்ந்தவர் முஹமது அமீர், 43. கே.டி.எஸ்., கார்டனிலுள்ள இவரது வீட்டில், கடந்த இரு வாரங்களாக பெயின்டிங் பணி நடந்தது. இப்பணியில் புலியகுளம், சிறு காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்த செல்வராஜ், 49, அவரது மகன் சந்துரு, 26 ஆகியோர் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் செல்வராஜ் ஏணியில் நின்றவாறு, பெயின்ட் அடித்துக் கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார்.
சந்துரு அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். பரிசோதித்த டாக்டர்கள், செல்வராஜ் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். சந்துரு புகாரின்படி, போத்தனூர் போலீசார் முஹமது அமீர், பெயின்டிங் கான்ட்ராக்டரான சிங்காநல்லூரை சேர்ந்த சின்னப்பராஜ், 52 ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.