/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மகாலிங்கபுரம் அருகே பஸ்சில் மோதி பெயின்டர் பலி மகாலிங்கபுரம் அருகே பஸ்சில் மோதி பெயின்டர் பலி
மகாலிங்கபுரம் அருகே பஸ்சில் மோதி பெயின்டர் பலி
மகாலிங்கபுரம் அருகே பஸ்சில் மோதி பெயின்டர் பலி
மகாலிங்கபுரம் அருகே பஸ்சில் மோதி பெயின்டர் பலி
ADDED : ஜூன் 03, 2024 01:32 AM
போத்தனூர்;வெள்ளலூர் செல்லும் வழியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் மதியழகன், 19; பெயின்டர். நேற்று மதியம் இவர் பைக்கில் கோணவாய்க்கால்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
மகாலிங்கபுரம் அருகே முன்னால் சென்ற மினி சரக்கு வாகனத்தை முந்த முயன்றார். எதிரே வந்த அரசு டவுன் பஸ்சில் மோதி, படுகாயமடைந்தார். அங்கிருந்தோர் மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக கூறினர். போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்,