3.5 லட்சம் ரூபாய், 3 சவரன் நகை திருட்டு
குனியமுத்தூர் அடுத்து இடையர்பாளையம் அருகேயுள்ள பூந்தோட்டத்தை சேர்ந்தவர் ஆசைதம்பி, 63. நேற்று முன்தினம் இரவு தனது மனைவியுடன், உறவினர் வீட்டிற்கு சென்றார். நேற்று காலை வீட்டிற்கு திரும்பியபோது, முன் கதவு தாழ் உடைக்கப்பட்டு, திறந்திருப்பதை கண்டார். பீரோவிலிருந்த.ரூ.3.5 லட்சம், மூன்று சவரன் தங்க நகை திருட்டு போயிருப்பது தெரிந்தது. இவரது புகாரின்படி, குனியமுத்தூர் புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
தந்தையை வெட்டிய மகனுக்கு சிறை
வடவள்ளி, கியூரியோ கார்டனை சேர்ந்தவர் குணசேகரன்,52; கூலித்தொழிலாளி. இவரது மகன், அரவிந்த்,30; டிரைவர். இவர், அடிக்கடி மது அருந்தியதால் தந்தைக்கும், மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று அரவிந்த் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது தந்தைக்கும், மகனுக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அரவிந்தை, தந்தை குணசேகரன் கண்டித்துள்ளார்.
விபத்தில் மனைவி பலி; கணவர் படுகாயம்
போத்தனூர் , செட்டிபாளையத்திலிருந்து பல்லடம் செல்லும் சாலையில், நேற்று பைக் ஒன்று பல்லடம் நோக்கி சென்றுகொண்டிருந்தது. எதிரே வந்த கார் ஒன்று சாலையின் வலதுபுறம் வந்து பைக் மீது மோதியது. பைக்கில் வந்த ஒரு ஆணும், பெண்ணும் படுகாயமடைந்தனர். அப்பகுதியிலிருந்தோர் இருவரையும் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள், பெண் உயிரிழந்து விட்டதாக கூறினர். செட்டிபாளையம் போலீசார் விசாரணையில், அவர்கள் சோமனூர் அருகே பூமலூர், பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் காமராஜ்,30, மனைவி. சுமித்ரா, 23 என்பதும், இருவரும் நேற்று கேரள மாநிலம், ஒழலபதியிலுள்ள சுமித்ராவின் பெற்றோர் வீட்டிலிருந்து, சோமனூருக்கு திரும்பிக் கொண்டிருந்ததும் தெரிந்தது. விபத்தை ஏற்படுத்திய காரின் டிரைவரான திருப்பூர், சூரியநல்லூர், விஜயாபுரத்தை சேர்ந்த தாமஸ், 62 என்பவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.