/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஒரே மாசம்தான்... அப்புறம் பாருங்க! போதை பொருள் இல்லாத பள்ளி வளாகம் உருவாக்க போலீஸ் சபதம் ஒரே மாசம்தான்... அப்புறம் பாருங்க! போதை பொருள் இல்லாத பள்ளி வளாகம் உருவாக்க போலீஸ் சபதம்
ஒரே மாசம்தான்... அப்புறம் பாருங்க! போதை பொருள் இல்லாத பள்ளி வளாகம் உருவாக்க போலீஸ் சபதம்
ஒரே மாசம்தான்... அப்புறம் பாருங்க! போதை பொருள் இல்லாத பள்ளி வளாகம் உருவாக்க போலீஸ் சபதம்
ஒரே மாசம்தான்... அப்புறம் பாருங்க! போதை பொருள் இல்லாத பள்ளி வளாகம் உருவாக்க போலீஸ் சபதம்
ADDED : ஜூன் 12, 2024 01:40 AM
கோவை;பள்ளிகளில் 'கூல் லிப்', 'இ-சிகரெட்' போதை பொருள் பயன்பாடு தலைதுாக்குவதை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்தி, 'கவுன்சிலிங்' வாயிலாக மாணவர்களை மீட்டெடுக்கும் நடவடிக்கையை, போலீசார் தீவிரப்படுத்திஉள்ளனர்.
கோவை மாவட்டத்தில், 1,210 அரசு, 177 அரசு உதவிபெறும் மற்றும், 665 தனியார் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். தற்போது, பள்ளி மாணவர்களை குறிவைத்து போதை பொருட்கள் விற்பனை அதிகம் நடக்கிறது.
குறிப்பாக, 'கூல் லிப்' போதை பொருளை, உதடு அல்லது நாக்கின் அடியில் வைத்துக் கொண்டால், சில வினாடிகளில் போதை உண்டாக்குகிறது. மிகக் குறைந்த விலையில் இப்பொருள் கிடைப்பதால் மாணவர்கள் அதிகம் வாங்குகின்றனர்.
புற்றுநோயை உண்டாக்கும் தன்மை, இந்த 'கூல் லிப்'புக்கு உண்டு. அதேபோல், தடை செய்யப்பட்ட புகை பொருட்கள் பயன்பாடும் மாணவர்களிடம் காணப்படுகிறது.
பள்ளிகளில் இருந்து, 100 மீட்டர் சுற்றளவில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யக் கூடாது என்று விதிகள் இருந்தும், மாணவர்களை குறிவைத்து விற்பது நடக்கிறது.
தற்போது, இளைஞர்களை கவரும் வகையில், 'ஸ்டைல்' ஆன தோற்றத்தில் இருக்கும் 'இ-சிகரெட்' புதிய போதை பொருள் பயன்பாடும் அதிகரித்துள்ளது. 'இ-சிகரெட்' விற்பனையை, 2019ல் மத்திய அரசு தடை செய்தது.
ஆனால், இணையதளங்களிலும் இதன் விற்பனை நடப்பதால் போலீசாருக்கு சவாலாக மாறியுள்ளது. எனவே, பள்ளி மாணவர்களிடம் இதை தடுக்க தலைமையாசிரியர்கள் தலைமையில், கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
போலீசாரும் அடிக்கடி பள்ளிகளுக்கு சென்று இக்குழுவினரிடம் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பள்ளிகள் தற்போது திறக்கப்பட்டுள்ள நிலையில், போதை பொருள் பயன்பாடு தலைதுாக்காது இருக்க, தலைமையாசிரியர்களுடன் கூட்டம் நடத்தி, மாநகர போலீசார் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உள்ளனர்.