ADDED : ஜூன் 12, 2024 01:41 AM
வடவள்ளி;வடவள்ளியில், நாய்களை தாக்கி, காயப்படுத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
வடவள்ளி, வீனஸ் கார்டனை சேர்ந்தவர் பிரதீப். இவர், தோட்டத்தில் கோழிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், இவர் தோட்டத்திற்குள் அடிக்கடி தெருநாய்கள் வருவதாக கூறி, 5 தெருநாய்களை அடித்துள்ளார்.
இதில், நாய்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த விலங்குகள் நல ஆர்வலர் சார்லி மரியா,43 என்பவர் காயமடைந்த நாய்களை மீட்டு, சிகிச்சைக்கு கொண்டு சென்றார்.
இதுதொடர்பாக, சார்லி மரியா வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து, நாய்களை தாக்கி காயப்படுத்திய பிரதீப் என்பவரை, கைது செய்தனர்.