/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தொகுப்பு வீடுகளை சீரமைக்க கிராமங்களில் அதிகாரிகள் ஆய்வு தொகுப்பு வீடுகளை சீரமைக்க கிராமங்களில் அதிகாரிகள் ஆய்வு
தொகுப்பு வீடுகளை சீரமைக்க கிராமங்களில் அதிகாரிகள் ஆய்வு
தொகுப்பு வீடுகளை சீரமைக்க கிராமங்களில் அதிகாரிகள் ஆய்வு
தொகுப்பு வீடுகளை சீரமைக்க கிராமங்களில் அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஜூன் 08, 2024 12:13 AM
உடுமலை;உடுமலையில் தொகுப்பு வீடுகள் சீரமைப்பதற்கான ஆய்வு பணிகள் நடக்கிறது.
ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில், பொருளாதார நிலையில் பின்தங்கிய குடும்பங்களுக்கான வாழ்விடமாக, தொகுப்பு வீடுகள் திட்டம் அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டது.
உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஒன்றியத்துக்குட்பட்ட பெரும்பான்மையான ஊராட்சிகளில் தொகுப்பு வீடுகள் பழுதடைந்தும், சிதிலமடைந்தும், இடியும் நிலையிலும் உள்ளது.
அங்கு வசிக்கும் பயனாளிகள், கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதை சரி செய்ய வேண்டும் என அம்மக்கள், ஒன்றிய அதிகாரிகளுக்கும், தமிழக அரசுக்கும் தொடர்ந்து மனுக்கள் வாயிலாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், தொகுப்பு வீடுகளை சீரமைக்க, அரசின் சார்பில் நிதிஒதுக்கீடு செய்யப்படுகிறது. தொகுப்பு வீடுகளில் மேற்கூரை ஓட்டு வீடாக இருப்பதை சீரமைக்க, 74ஆயிரம் ரூபாயும், சிமென்ட் மேற்கூரைகளாக இருக்கும் வீடுகளை சீரமைக்க, ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
உடுமலையில் சிதிலமடைந்த வீடுகள் குறித்து அனைத்து ஊராட்சிகளிலும் கணக்கெடுப்பு பணிகள் நடந்தது. தற்போது சிதிலமடைந்த வீடுகளின் பழுது அளவு குறித்து ஊராட்சி மற்றும் ஒன்றிய அலுவலர்கள் நேரடியாக ஆய்வு நடத்துகின்றனர்.