/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு; நகராட்சி நடவடிக்கை எடுக்குமா? பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு; நகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு; நகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு; நகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு; நகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
ADDED : ஜூன் 05, 2024 09:42 PM
உடுமலை : உடுமலை பஸ் ஸ்டாண்டில், பிற வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து பிரச்னை, நெரிசல் ஏற்படுகிறது.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை பிரதான நகரமாக அமைந்துள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பஸ்களில் பயணம் செய்கின்றனர்.
இதனால், அங்கு எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், பஸ் ஸ்டாண்டில் திருப்பூர், மூணாறு பஸ்கள் நிற்குமிடங்களில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
இது மட்டுமல்லாமல், கார் உட்பட பிற வாகனங்களும் சர்வ சாதாரணமாக பஸ் ஸ்டாண்டுக்குள் உள்ளே சென்று திரும்புகின்றன. வாகனங்களின் ஆக்கிரமிப்புகளால், அங்கு போக்குவரத்து பிரச்னை ஏற்படுவதோடு, பிற வாகனங்கள் செல்ல முடியாமல் திணற வேண்டியதுள்ளது.
அங்கு மக்கள் அமரும் இடங்களில் தற்காலிக கடைகளும் போடப்படுகின்றன. இங்கு நிலவும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் பல முறை நகராட்சிக்கும், போலீசாருக்கும் புகார் தெரிவித்துள்ளனர்.
நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சியும், போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.