/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாதிரி ஓட்டுப்பதிவு அழிக்காததால் எண்ணப்படாத 915 ஓட்டுகள் மாதிரி ஓட்டுப்பதிவு அழிக்காததால் எண்ணப்படாத 915 ஓட்டுகள்
மாதிரி ஓட்டுப்பதிவு அழிக்காததால் எண்ணப்படாத 915 ஓட்டுகள்
மாதிரி ஓட்டுப்பதிவு அழிக்காததால் எண்ணப்படாத 915 ஓட்டுகள்
மாதிரி ஓட்டுப்பதிவு அழிக்காததால் எண்ணப்படாத 915 ஓட்டுகள்
ADDED : ஜூன் 05, 2024 09:43 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி தொகுதியில், மாதிரி ஓட்டுப்பதிவு அழிக்காததால், ஒரு இயந்திரத்தில் ஓட்டுகள் மட்டும் எண்ணப்படாமல் கைவிடப்பட்டன.
பொள்ளாச்சி தொகுதியில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. அதில், ஒரு ஓட்டு இயந்திரத்தில் மட்டும் மாதிரி ஓட்டுகள் அழிக்காததால், அதில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படவில்லை என கூறப்படுகிறது.
பொள்ளாச்சி சமத்துார் ராம ஐயங்கார் நகராட்சி மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடி மையத்தில், ஓட்டுச்சாவடி எண், 208ல், மொத்தம், 865 ஓட்டுகள் உள்ளன.
அந்த ஓட்டுச்சாவடியில், மின்னணு இயந்திரத்தை சரிபார்க்க, முகவர்கள் முன்னிலையில், மாதிரி ஓட்டுப்பதிவு செய்யப்பட்டது. அதன்பின், அந்த ஓட்டுகளை அழிக்காமல், 'சீல்' வைக்கப்பட்டு, ஓட்டுப்பதிவு நடந்தது. இந்த பிரச்னையால், அந்த இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படாமல் கைவிடப்பட்டதாக தேர்தல் அலுவலர்கள் கூறினர்.
அரசியல் கட்சியினர் கூறுகையில், 'நகராட்சி, ஓட்டுச்சாவடி எண், 208ல் மாதிரி ஓட்டுப்பதிவில், 50 ஓட்டுகள் பதிவிடப்பட்டன. இவை அழிக்கப்படாமல் ஓட்டுப்பதிவு நடந்தது. மொத்தம், 915 ஓட்டுகள் பதிவானது. இதற்கு அப்போதே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படாமல், மற்றவை எண்ணப்பட்டது,' என்றனர்.