/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஒரு ரோடு கூட உருப்படியில்லை; வாகன ஓட்டுநர்கள் அதிருப்தி ஒரு ரோடு கூட உருப்படியில்லை; வாகன ஓட்டுநர்கள் அதிருப்தி
ஒரு ரோடு கூட உருப்படியில்லை; வாகன ஓட்டுநர்கள் அதிருப்தி
ஒரு ரோடு கூட உருப்படியில்லை; வாகன ஓட்டுநர்கள் அதிருப்தி
ஒரு ரோடு கூட உருப்படியில்லை; வாகன ஓட்டுநர்கள் அதிருப்தி
ADDED : ஜூலை 24, 2024 08:33 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள ரோடுகள் மோசமான நிலையில் உள்ளதால், வாகன ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பொள்ளாச்சி நகராட்சி நியூஸ்கீம் ரோடு வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. கான்கிரீட் சாலையாக இருந்த ரோட்டில், பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழிக்காக தோண்டப்பட்டது. அதன்பின், முறையாக ரோடு சீரமைக்காததால் அவ்வப்போது பெயர்ந்து விபத்து ஏற்படுத்துகிறது.
அதில், டி.எஸ்.பி., அலுவலகம் ரோடு - நாச்சிமுத்து வீதி, குமரன் வீதிக்கு செல்லும் இணைப்பு ரோடு அருகே, நியூஸ்கீம் ரோட்டில் பெரிய குழி ஏற்பட்டு உள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகின்றனர். மேலும், குழியில் வாகனங்கள் ஏறி இறங்குவதால் விபத்து ஏற்படுகிறது. மேலும், குமரன் வீதி - அன்சாரி வீதி சந்திப்பு பகுதி அருகே தரைமட்ட பாலத்தையொட்டி ரோடு ஓட்டையாக உள்ளதால் விபத்து ஏற்படுகிறது. இதுபோன்று நகரில் பல இடங்களில் உள்ள ரோடுகள் மோசமாகி விபத்துகளை ஏற்படுத்தும் பகுதியாக மாறியுள்ளது.
பொதுமக்கள் கூறியதாவது:
ரோடுகளில் உள்ள பள்ளத்தில் இறங்கும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகின்றன. மேலும், கவனமின்றி வருவோர் விபத்துக்குள்ளாவது தொடர்கிறது. மழை காலங்களில் குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால், குழியின் ஆழம் தெரியாமல் வருவோர் கீழே விழுகின்றனர்.
பள்ளம் இருப்பதை கவனித்து திருப்பும் போது, மற்ற வாகனங்களின் மீது மோதி விபத்துகள் ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.