/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தென்னையில் பயிர் பாதுகாப்பு; விவசாயிகளுக்கு செயல்விளக்கம் தென்னையில் பயிர் பாதுகாப்பு; விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
தென்னையில் பயிர் பாதுகாப்பு; விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
தென்னையில் பயிர் பாதுகாப்பு; விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
தென்னையில் பயிர் பாதுகாப்பு; விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
ADDED : ஜூலை 24, 2024 08:33 PM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, செங்குட்டைபாளையத்தில் தென்னை வளர்ச்சி வாரியம் கள சார்பு விவசாய பயிற்சி அளிக்கப்பட்டது.
கிணத்துக்கடவு, வரதனூர் ஊராட்சி, செங்குட்டைபாளையம் ஊராட்சி அலுவலகத்தில், தோட்டக்கலை துறை சார்பில், தென்னை வளர்ச்சி வாரியம் கள சார்பு விவசாய பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், கிணத்துக்கடவு தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ஜமுனாதேவி, தோட்டக்கலை துறை துணை அலுவலர் பெருமாள்சாமி, கோவை தோட்டக்கலை துறை விஞ்ஞானி சகாதேவன், இயற்கை விவசாயி மாரிமுத்து மற்றும் அப்பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர்.
பயிற்சியில், தென்னையில் ஏற்படும் பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. வெள்ளை ஈ தாக்குதலுக்கு ஒட்டுப்பொறி வைத்தல், மஞ்சள் நிற பொறி வைத்தல் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள், விவசாயிகளுக்கு 'இ - நாம்' திட்டங்கள் குறித்தும், கொப்பரையில் வருமானம் ஈட்டுவது குறித்து விவரித்தனர்.