/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ போலி நிறுவனங்களின் பெயரில் ரூ.10 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி., மோசடி பெண்ணை கைது செய்த நொய்டா போலீசார் போலி நிறுவனங்களின் பெயரில் ரூ.10 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி., மோசடி பெண்ணை கைது செய்த நொய்டா போலீசார்
போலி நிறுவனங்களின் பெயரில் ரூ.10 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி., மோசடி பெண்ணை கைது செய்த நொய்டா போலீசார்
போலி நிறுவனங்களின் பெயரில் ரூ.10 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி., மோசடி பெண்ணை கைது செய்த நொய்டா போலீசார்
போலி நிறுவனங்களின் பெயரில் ரூ.10 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி., மோசடி பெண்ணை கைது செய்த நொய்டா போலீசார்
ADDED : ஜூன் 24, 2024 07:11 PM
கோவை:போலியான ஆவணங்கள் தயாரித்து ரூ.10 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி., மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய கோவை சேர்ந்த பெண்ணை, நொய்டா போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரபிரதேசம் மாநிலம், நொய்டாவில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.,) மோசடி நடந்தது தொடர்பாக, கடந்தாண்டு ஜூன் மாதம் வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அதாவது, ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை உருவாக்கி, போலியாக 'இ-வே' பில் தயாரித்தும், உள்ளீட்டு வரிச் சலுகை(ஐ.டி.சி.,) பெற்றும் மோசடி நடந்துள்ளது. இதுதொடர்பாக, டில்லி, ராஜஸ்தான், ஹரியானா, மத்திய பிரசேதம் மாநிலங்களில் இதுவரை, 45 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்த சுகன்யா என்பவர், மோடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர் கோவையில், உலோகம் தயாரிப்பு தொழிற்சாலை நடத்தி வருகிறார். போலி நிறுவனங்களின் பெயரில், ஐ.டி.சி., பெற்று கடந்த ஓராண்டில் ரூ.14.2 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது தெரியவந்தது.
தகவல் அறிந்து போலீசார், தலைமறைவாக இருந்த சுகன்யா மீது மோசடி உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர். இவர் குறித்து தகவல் தருவோருக்கு, ரூ.25 ஆயிரம் வெகுமதி வழங்கப்படும் எனவும், மூன்று மாதங்களுக்கு முன்பு நொய்டா போலீசார் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், இவர் இருக்கும் தகவல் அறிந்து, நொய்டா போலீசார் கடந்த, 22ம் தேதி கோவை வந்தனர். கோவை போலீசாரின் உதவியுடன், சுகன்யாவை நொய்டா போலீசார் கைது செய்து, அழைத்து சென்றனர்.
கோவை மாநகர போலீசார் கூறுகையில், 'கடந்த, 22ம் தேதி நொய்டா போலீசார் நான்கு பேர் கோவை வந்தனர். ரேஸ்கோர்ஸில் உள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் தங்கியிருந்த சுகன்யாவை கைது செய்து, நொய்டா கொண்டு சென்றனர். அவரது கணவர் பிரபுவையும் தேடிவருகின்றனர்' என்றனர்.