Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கால்நடை பயன்பாட்டுக்கு 'நிமிசுலைடு' மருந்து தடை; கோவையில் ஆய்வு பணிகள் தீவிரம் 

கால்நடை பயன்பாட்டுக்கு 'நிமிசுலைடு' மருந்து தடை; கோவையில் ஆய்வு பணிகள் தீவிரம் 

கால்நடை பயன்பாட்டுக்கு 'நிமிசுலைடு' மருந்து தடை; கோவையில் ஆய்வு பணிகள் தீவிரம் 

கால்நடை பயன்பாட்டுக்கு 'நிமிசுலைடு' மருந்து தடை; கோவையில் ஆய்வு பணிகள் தீவிரம் 

ADDED : மார் 12, 2025 07:24 AM


Google News
கோவை; மனிதர்களுக்கு வலிநிவாரணியாகவும், காய்ச்சல் உள்ளிட்டவைகளுக்கும் பயன்படுத்தும் நிமிசுலைடு மற்றும் அதன் கலப்பு மருந்துகதளை, பரிந்துரைசீட்டு இல்லாமல் பெற்று, கால்நடைகளுக்கு பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

கால்நடைகளுக்கு பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மருந்தான, நிமிசுலைடு 2024 டிச., மாதம் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இம்மருந்தை உண்ணும் விலங்கின் உடல்களை உண்ணும் கழுகும், இம்மருந்தால் பாதிக்கப்பட்டு அதிகளவில் இறந்ததே, இத்தடைக்கு முக்கிய காரணம்.

இந்நிலையில், சில மருந்து கடைகளில் விதிமுறைகளை மீறி, கால்நடை பயன்பாட்டுக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. கோவை மண்டல மருந்து கட்டுப்பாட்டு துறையினர், மருந்துகடைகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மண்டல மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குனர் மாரிமுத்து கூறியதாவது:

நிமிசுலைடு மருந்து, கால்நடை பயன்பாட்டுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. கோவை மண்டலத்தில் 2500 மருந்துகடைகள் உள்ளன. இங்கு கால்நடைக்கு தனியாக மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன.

மனிதர்களுக்கான நிமிசுலைடு சார்ந்த மருந்துகளை, டாக்டர் பரிந்துரை இன்றி யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது. மனிதர்கள் பயன்பாட்டுக்கு உள்ள மருந்துகளை, தவறாக பரிந்துரை சீட்டு இன்றி கால்நடை பயன்பாட்டுக்கு விற்பனை செய்தால், கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தியுள்ளோம்.

கால்நடை பயன்பாட்டுக்கு டிச., முன்பு வரை வினியோகிக்கப்பட்ட, நிமிசுலைடு மருந்து தயாரிப்பாளர்களுக்கு, அனைத்து கடைகளில் இருந்தும், அவற்றை திரும்ப அளிப்பதை உறுதி செய்துள்ளோம். தயாரிப்பாளர்கள் அதை விதிமுறைப்படி அப்புறப்படுத்தி விடுவார்கள்.

கடந்த, ஜன., பிப்., மாதம் மேற்கொண்ட ஆய்வில், இம்மருந்துகளை பரிந்துரை சீட்டு இன்றி விற்ற, 5 கடைகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம்; இதில், 2 கடைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய பரிந்துரைத்துள்ளோம். தொடர்ந்து ஆய்வுகள் நடைபெறும்.

இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us