Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஜல் ஜக்தி அபியான் நோடல் அதிகாரி கோவை நீர் நிலைகளில் கள ஆய்வு

ஜல் ஜக்தி அபியான் நோடல் அதிகாரி கோவை நீர் நிலைகளில் கள ஆய்வு

ஜல் ஜக்தி அபியான் நோடல் அதிகாரி கோவை நீர் நிலைகளில் கள ஆய்வு

ஜல் ஜக்தி அபியான் நோடல் அதிகாரி கோவை நீர் நிலைகளில் கள ஆய்வு

ADDED : மார் 12, 2025 07:23 AM


Google News
Latest Tamil News
கோவை; கோவையில் சிறுதுளி அமைப்பு சார்பில் நீர் நிலைகளில் மேம்பாட்டு பணிகள் செய்து வருவது குறித்து, ஜல் சக்தி அபியான் நோடல் ஆபீசர் ராஜலட்சுமி, கோவையில் இரு நாட்கள் ஆய்வு செய்தார்.

'சிறுதுளி' தன்னார்வ அமைப்பு சார்பில், 22 ஆண்டுகளில், கோவை மாவட்டத்தில் நீர் நிலைகளை மீட்டெடுக்க என்னென்ன பணிகள் செய்யப்பட்டு இருக்கின்றன என்பது தொடர்பாக, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் உள்ள அரங்கில், 'பவர் பாயின்ட்' மூலம் விளக்கப்பட்டது.

பின், முண்டந்துறை, ஊத்துப்பள்ளம், நண்டங்கரை தடுப்பணைகள், கருப்பராயன் கோவில், மொசோரம்பு ஓடை ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை நோடல் ஆபீசர் நேரில் பார்வையிட்டார்.

'சிறுதுளி' தரப்பில் இருந்து, 'கோவை போன்ற வேகமாக வளரும் நகரங்களில், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை நிறைய இடங்களில் ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே எதிர்காலத்தில் தண்ணீர் தேவையை சமாளிக்க முடியும். நாளுக்கு நாள் தண்ணீர் தேவை அதிகரித்து வருகிறது. அதற்கு நீர் நிலைகளை மழைக்கு முன் தயார்ப்படுத்த வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டது.

கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சங்கீத் பல்வாத் சாஹே உடனிருந்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us