/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நாதன் நினைவு கோப்பை ராகவேந்திரா, ஜி.ஆர்.டி., அசத்தல் நாதன் நினைவு கோப்பை ராகவேந்திரா, ஜி.ஆர்.டி., அசத்தல்
நாதன் நினைவு கோப்பை ராகவேந்திரா, ஜி.ஆர்.டி., அசத்தல்
நாதன் நினைவு கோப்பை ராகவேந்திரா, ஜி.ஆர்.டி., அசத்தல்
நாதன் நினைவு கோப்பை ராகவேந்திரா, ஜி.ஆர்.டி., அசத்தல்
ADDED : ஜூலை 06, 2024 08:41 PM

பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில், ராகவேந்திரா மற்றும் ஜி.ஆர்.டி., பள்ளி அணிகள், தலா இரண்டு பிரிவுகளில் முதலிடம் பிடித்தனர்.
விவேகம் சீனியர் செகண்டரி பள்ளி சார்பில், பள்ளிகளுக்கு இடையேயான 'இரண்டாம் ஆண்டு நாதன் நினைவு கோப்பை'க்கான ஐவர் கால்பந்து போட்டி, விவேகம் பள்ளியில் நடந்தது.
மாணவ மாணவியருக்கு 11, 13, 17 மற்றும் 19 ஆகிய வயது பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையில் நடத்தப்பட்டன.
மாணவர்கள் பிரிவு இறுதிப்போட்டி முடிவுகள்:
11 வயது பிரிவில் ஜி.ஆர்.டி., பள்ளி அணி 4 - 3 என்ற கோல் கணக்கில், விவேகம் பள்ளி அணியையும், 13 வயது பிரிவில் ஜி.ஆர்.டி., பள்ளி அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் இந்தியன் பப்ளிக் பள்ளியையும், 17 வயது பிரிவில் ராகவேந்திரா பள்ளி அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் சி.எஸ்., அகாடமி அணியையும், 19 வயது பிரிவில் ராகவேந்திரா பள்ளி அணி 2 - 0 என்ற கோல் கணக்கில், நாச்சம்மாள் பள்ளி அணியையும் வீழ்த்தி, முதலிடத்தை பிடித்தன.