/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மதுரைவீரன் கோவிலில் வரும் 12ல் கும்பாபிேஷகம் மதுரைவீரன் கோவிலில் வரும் 12ல் கும்பாபிேஷகம்
மதுரைவீரன் கோவிலில் வரும் 12ல் கும்பாபிேஷகம்
மதுரைவீரன் கோவிலில் வரும் 12ல் கும்பாபிேஷகம்
மதுரைவீரன் கோவிலில் வரும் 12ல் கும்பாபிேஷகம்
ADDED : ஜூன் 06, 2024 11:56 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி நந்தனார் காலனியில் வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் சமேத மதுரை வீரன் கோவிலில், வரும், 12ம் தேதி கும்பாபிேஷக விழா நடக்கிறது.
பொள்ளாச்சி நந்தனார் காலனி வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் சமேத மதுரை வீரன் கோவிலில், மஹா கும்பாபிேஷக விழா வரும், 10ம் தேதி துவங்குகிறது.
விழாவை முன்னிட்டு, காலை, 9:00 மணிக்கு மங்கள இசை, வேதபாராயணம், தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், பூர்ணாஹுதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
மாலை, 6:00 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜை, தீபாராதனையும், 11ம் தேதி காலை, 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மஹாலட்சுமி பூஜை, ரக் ஷா பந்தனம், மாலை, 6:00 மணிக்கு முதல்கால யாகம், மஹா பூர்ணாஹுதி மற்றும் அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
வரும், 12ம் தேதி காலை, 6:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், கடம் புறப்பாடு உள்ளிட்ட பூஜைகளும், காலை, 9:00 முதல், 10:00 மணிக்குள் விமான கோபுர மஹா கும்பாபிேஷகம், தீபாராதனை நடக்கிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது.