/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவையில் ஆக., 17ல் கார்த்திக் ராஜா இசை நிகழ்ச்சி கோவையில் ஆக., 17ல் கார்த்திக் ராஜா இசை நிகழ்ச்சி
கோவையில் ஆக., 17ல் கார்த்திக் ராஜா இசை நிகழ்ச்சி
கோவையில் ஆக., 17ல் கார்த்திக் ராஜா இசை நிகழ்ச்சி
கோவையில் ஆக., 17ல் கார்த்திக் ராஜா இசை நிகழ்ச்சி
ADDED : ஜூன் 17, 2024 12:51 AM

கோவை;இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் இசை திருவிழா, கோவையில் நடைபெற உள்ளது.
பி.கே., என்டர்டெயின்மென்ட் மற்றும் 'யெஸ் பாஸ்' இணைந்து வழங்கும், இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் மாபெரும் இசை திருவிழா, 'கிங் ஆப் கிங்ஸ் 2024' என்ற பெயரில், ஆக., 17ம் தேதி, கோவை ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், மாலை 6:00 மணியிலிருந்து இரவு 10:00 மணி வரை நடக்கிறது.
இதுகுறித்து கார்த்திக் ராஜா கூறியதாவது:
இசை ரசிகர்கள் அதிகம் உள்ள பகுதியாக, கோவை விளங்குகிறது. இங்கு நிகழ்ச்சியை நடத்துவதில் மகிழ்ச்சி. நிகழ்ச்சியில், பாடகர்கள் ஹரிஹரன், சாதனா சர்க்கம், மதுபாலகிருஷ்ணன், சைந்தவி, சிவாங்கி, அஜய் கிருஷ்ணா, ஆனந்த் அரவிந்தாக் ஷன், பிரியங்கா, பிரியா ஜெர்சன், சத்ய பிரகாஷ் ஆகியோருடன், முன்னணி மற்றும் பின்னணி திரை இசைக்கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல்களுடன், நான் மற்றும் யுவன் இசையமைத்த பாடல்களும் பாடப்பட உள்ளன. இளையராஜாவின் அனுமதி பெற்று தான், அவரின் பாடல்கள் பாடப்பட உள்ளன. அதிகபட்சமாக, 30 முதல் 35 பாடல்கள் பாடுவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.