/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ டூ வீலர்களை திருடிய நான்கு பேர் கைது டூ வீலர்களை திருடிய நான்கு பேர் கைது
டூ வீலர்களை திருடிய நான்கு பேர் கைது
டூ வீலர்களை திருடிய நான்கு பேர் கைது
டூ வீலர்களை திருடிய நான்கு பேர் கைது
ADDED : ஜூன் 17, 2024 12:49 AM

கோவை:ஒர்க் ஷாப்பில் திருடப்பட்ட ஆறு டூ வீலர்களை பறிமுதல் செய்த போலீசார் நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆவாரம்பாளையம் ரோடு, அண்ணா நகரில் உள்ள ஒர்க் ஷாப் ஒன்றில் கடந்த பிப்., 17ம் தேதி சர்வீசுக்கு வந்திருந்த இரண்டு இரு வாகனங்களை மர்ம நபர்கள் ஷட்டரை திறந்து திருடி சென்றுவிட்டதாக, ஒர்க் ஷாப் உரிமையாளர் பிரசாத் கண்ணன் காட்டூர் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரித்துவந்த நிலையில் கடந்த மார்ச், 27ம் தேதி இரவு ஷட்டரின் பூட்டை உடைத்து நான்கு டூ வீலர்களை திருடி சென்றுவிட்டதாக மீண்டும் பிரசாத் கண்ணன் புகார் அளித்தார். போலீசாரும் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.
'சிசிடிவி' கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் ஒர்க் ஷாப்பில் ஏற்கனவே பணிபுரிந்து வேலையை விட்டு நின்ற காரைக்காலை சேர்ந்த வாசிம் அக்ரம் என்பவர் தனது நண்பர்களான திருவாரூர், குடவாசலை சேர்ந்த ஆகாஷ், வெற்றிவேல், மயிலாடுதுறையை சேர்ந்த ராஜா ஆகியோருடன் சேர்ந்து ஆறு டூவீலர்களையும் திருடியது தெரியவந்தது. நான்கு பேரையும் ஒண்டிப்புதுார் மேம்பாலம் கீழே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து ஆறு டூ வீலர்களையும் பறிமுதல் செய்தனர்.