/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ திருடச்சென்ற வீட்டில் போதையில் துாங்கிய திருடன்! திருடச்சென்ற வீட்டில் போதையில் துாங்கிய திருடன்!
திருடச்சென்ற வீட்டில் போதையில் துாங்கிய திருடன்!
திருடச்சென்ற வீட்டில் போதையில் துாங்கிய திருடன்!
திருடச்சென்ற வீட்டில் போதையில் துாங்கிய திருடன்!
ADDED : ஜூலை 28, 2024 01:06 AM
கோவை;திருடப்போன வீட்டில் மது போதையில் மயங்கி, துாங்கிய திருடனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை ராம்நகர், நேரு வீதியை சேர்ந்தவர் ராஜன், 53. கடந்த புதன்கிழமை இவர் உறவினர் வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்த போது, மர்மநபர் ஒருவர் 'ஹாயாக' குறட்டை விட்டு துாங்கிக் கொண்டிருந்தார். ராஜன் அந்நபரை எழுப்ப முயற்சித்தும், அவர் எழுந்திருக்கவில்லை. இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். காட்டூர் போலீசார் அந்நபரை தட்டியெழுப்பினர்.
தன்னை சுற்றிலும் போலீசார் நிற்பதை பார்த்ததும், திருடன் திருதிருவென விழித்தார். விசாரணையில், அந்நபர் கருமத்தம்பட்டியை சேர்ந்த பாலசுப்ரமணியம், 55 எனத் தெரிந்தது. திருடுவதற்காக வீட்டு கதவு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த பாலசுப்ரமணியம், மதுபோதையில் அங்கேயே படுத்து துாங்கியுள்ளார். எந்த பொருளையும் திருடவில்லை. போதை திருடனை போலீசார் சிறையில் அடைத்தனர்.