/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரசு கலை கல்லுாரியில் பட்டமளிப்பு விழா அரசு கலை கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
அரசு கலை கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
அரசு கலை கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
அரசு கலை கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : ஜூலை 28, 2024 01:07 AM

கோவை:கோவை அரசு கலை கல்லுாரியின் 32வது பட்டமளிப்பு விழா, நேற்று கல்லுாரி அரங்கில் நடந்தது. கோவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சதீஷ், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.
இதில் அவர் பேசியதாவது:
பட்டங்கள் பெறுவது மட்டுமின்றி தொடர்ந்து, தகுதிகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். வரும் ஐந்து ஆண்டுகளில் உங்களின் செயல்பாடுகள், உழைப்பே அடுத்த, 30 ஆண்டுகளை தீர்மானிக்கும். போட்டித்தேர்வுக்கு தயார்படுத்தி, அனைத்திலும் பங்கேற்க திறன்களை மேம்படுத்திக்கொள்ளுங்கள்.
இவ்வாறு, அவர் பேசினார்.
இதில், 1210 இளநிலை 395 முதுநிலை மாணவர்கள் பட்டங்களை பெற்றுக்கொண்டனர். ஒவ்வொரு துறையிலும் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கல்லுாரி முதல்வர் எழிலி, பேராசிரியர்கள், துறைத்தலைவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.