/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வற்றல் மிளகாய் உற்பத்திக்கு ஆர்வம் வற்றல் மிளகாய் உற்பத்திக்கு ஆர்வம்
வற்றல் மிளகாய் உற்பத்திக்கு ஆர்வம்
வற்றல் மிளகாய் உற்பத்திக்கு ஆர்வம்
வற்றல் மிளகாய் உற்பத்திக்கு ஆர்வம்
ADDED : ஜூலை 19, 2024 01:39 AM
உடுமலை;பச்சை மிளகாய் சாகுபடி செய்யும் விவசாயிகள், மிளகாயை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.
உடுமலை வட்டாரத்தில், கிணற்றுப்பாசனத்தில், செம்மண் மற்றும் களிமண் பரப்பில், மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது.
நாற்றுப்பண்ணைகளில் இருந்து குறிப்பிட்ட நாட்கள் வளர்ந்த நாற்றுகளை, வாங்கி நடவு செய்கின்றனர்.
போதிய இடைவெளி விட்டு, நடவு செய்வதால், ெஹக்டேருக்கு, 13 மெட்ரிக்., டன், வரை விளைச்சல் கிடைப்பதாக, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
சாகுபடியில், மகசூல் அதிகரிக்கும் போது, சந்தையில், விலை வீழ்ச்சி ஏற்படுகிறது. இதனால், மிளகாய்களை செடியிலேயே பழுக்க விட்டு, பின்னர் அறுவடை செய்கின்றனர்.
இதில், 'குறிப்பிட்ட சதவீதம் விதைத்தேவைக்கு பயன்படுகிறது; உலர்களங்களில் காய வைத்து வற்றல் மிளகாயாகவும் விற்பனை செய்கிறோம்,'என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
செடியிலேயே மிளகாயை காய விடுவதால், அவற்றின் எடை வெகுவாக குறைந்து, ெஹக்டேருக்கு, 3 மெட்ரிக்., டன் வற்றல் மிளகாய் கிடைக்கிறது.
பச்சை மிளகாயை விட, வற்றலுக்கு அதிக விலை கிடைப்பதால், உடுமலை பகுதி விவசாயிகள் இந்த முறையை பின்பற்ற ஆர்வம் காட்டி வருகின்றனர்.
விளைநிலங்களில், குறைந்த கொள்ளளவு உடைய சோலார் உலர்கலன்களை அமைக்க மானியம் வழங்கினால், வற்றல் மிளகாய் உற்பத்தி செய்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.