/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாநகராட்சியில் வளர்ச்சி பணி விரைந்து முடிக்க அறிவுறுத்தல் மாநகராட்சியில் வளர்ச்சி பணி விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
மாநகராட்சியில் வளர்ச்சி பணி விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
மாநகராட்சியில் வளர்ச்சி பணி விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
மாநகராட்சியில் வளர்ச்சி பணி விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 09, 2024 11:43 PM
கோவை:மாநகராட்சியில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்துக்குட்பட்ட வார்டு எண், 15 ல் சுப்ரமணியம்பாளையத்தில், 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, புனரமைப்பு மேற்கொள்வது, தரைமட்ட நீர்தேக்க தொட்டி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மையம் ஆகியவை அமைக்கும் பணி நடக்கிறது.
இதேபோல், துடியலுார் சேரன் காலனியில் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் துணை சுகாதார நிலையம், சின்னவேடம்பட்டி குளக்கரையில் அம்ருத், 2.0 திட்டத்தில், ரூ.1.15 கோடி மதிப்பில் நடைபாதை, சைக்கிள் பாதை அமைக்கும் பணிகள், உடையாம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், ரூ.99.50 லட்சம் மதிப்பிலான வகுப்பறை கட்டுமான பணிகள், மணியகாரன்பாளையத்தில், ரூ.1.57 கோடியில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், முல்லை நகரில், கட்டப்பட்டு வரும், ரூ.1.60 கோடியிலான ஆதரவற்றோருக்கான இரவு தங்கும் விடுதி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.
இப்பணிகளை, மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் நேற்று ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.