/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு இடம் மாற்றம் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு இடம் மாற்றம்
பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு இடம் மாற்றம்
பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு இடம் மாற்றம்
பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு இடம் மாற்றம்
ADDED : ஜூலை 09, 2024 11:43 PM
கோவை;கோவை கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நாளை துவங்குகிறது. இந்த கலந்தாய்வு நடக்கும் இடம் தற்போது மாற்றப்பட்டுள்ளது.
-அரசு, மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும், இந்த கல்வியாண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, கோவை ராஜவீதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது நிர்வாக காரணங்களுக்காக, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கோவை திருச்சி ரோடு, ராமநாதபுரம் அல்வேர்னியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் என, மாவட்ட முதன்மை அலுவலர் பாலமுரளி தெரிவித்துள்ளார்.