ADDED : ஜூலை 15, 2024 02:42 AM
ஆனைமலை;ஆனைமலையில், மட்டை தேங்காய் மறைமுக ஏலம் இன்று துவங்கப்படுகிறது.
வேளாண்மை உழவர் நலத்துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை கோவை விற்பனைக்குழு சார்பில், மட்டை தேங்காய் மறைமுக ஏலம் இன்று முதல் ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் துவங்கப்படுகிறது.
வாரம்தோறும் திங்கள் கிழமை தேசிய வேளாண் சந்தை இ - நாம் வாயிலாக மட்டைதேங்காய் மறைமுக ஏலம் நடைபெறுகிறது.
வெளியூர் மற்றும் வெளிமாநில வணிகர்கள் மறைமுக ஏலத்தில் பங்கேற்பதால், விவசாயிகளுக்கு போட்டி விலை, சரியான எடை, நேரடி வங்கி பண பரிமாற்றம் கிடைப்பதால் விவசாயிகள், தங்களது விளை பொருளான மட்டை தேங்காய் விற்பனை செய்யப்படுகிறது. இத்தகவலை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில் முருகன் தெரிவித்தார்.