ADDED : ஜூன் 20, 2024 05:54 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், பஸ் ஸ்டாண்ட், காந்திசிலை ஆகிய இடங்களில் இருந்த போக்குவரத்து சிக்னல் அகற்றப்பட்டு, ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், அங்கு போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்காததால், அவ்வப்போது போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகின்றனர்.
மேலும், மகாலிங்கபுரம் ரோடு - பல்லடம் ரோடு சந்திப்பு, மகாலிங்கபுரம் ஆர்ச் - கோவை ரோடு சந்திப்பு, தேர்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில், தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டது.
ஆனால், சிக்னல் சரிவர செயல்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. இதனால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்படுகிறது. இதற்கு, போலீசார் தீர்வு காண வேண்டும்.