/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சோதனைச்சாவடி ெஷட் வாகனம் மோதியதில் சேதம் சோதனைச்சாவடி ெஷட் வாகனம் மோதியதில் சேதம்
சோதனைச்சாவடி ெஷட் வாகனம் மோதியதில் சேதம்
சோதனைச்சாவடி ெஷட் வாகனம் மோதியதில் சேதம்
சோதனைச்சாவடி ெஷட் வாகனம் மோதியதில் சேதம்
ADDED : ஜூன் 20, 2024 05:52 AM

பொள்ளாச்சி, : பொள்ளாச்சி, பல்லடம் ரோட்டில், ஐந்து முனை சந்திப்பு பகுதியில், போலீசாரின் சோதனைச் சாவடி ெஷட், வாகனம் மோதியதில் சேதமடைந்தது.
பொள்ளாச்சியில், மகாலிங்கபுரம் - பல்லடம் ரோடு சந்திப்பில், போலீசாரின் சோதனைச் சாவடி ெஷட் அமைக்கப்பட்டிருந்தது. அவ்வழியே வரும் வாகனங்களை, போலீசார் தணிக்கைக்கு உட்படுத்தியும் வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை, சரக்கு ஏற்றி வந்த வாகனம், ெஷட் மீது மோதியது. அப்போது, அங்கு போலீசார் யாரும் பணியில் இல்லாததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மேலும், மோதிய வேகத்தில் அந்த லாரி, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. காலையில், 'ெஷட்' சேதமானதைப் பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அருகே உள்ள கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளைக் கொண்டு, விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.