/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாணவியருக்கான வாலிபால் இருகூர் அரசு பள்ளி சாம்பியன் மாணவியருக்கான வாலிபால் இருகூர் அரசு பள்ளி சாம்பியன்
மாணவியருக்கான வாலிபால் இருகூர் அரசு பள்ளி சாம்பியன்
மாணவியருக்கான வாலிபால் இருகூர் அரசு பள்ளி சாம்பியன்
மாணவியருக்கான வாலிபால் இருகூர் அரசு பள்ளி சாம்பியன்
ADDED : ஜூலை 03, 2024 01:01 AM

கோவை;பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில், இருகூர் அரசு பள்ளி அணி சாம்பியன் கோப்பையை வென்றது.
கணபதி, சி.எம்.எஸ்., மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி சார்பில் சி.எம்.எஸ்., கோப்பைக்கான 29ம் ஆண்டு மாவட்ட அளவிலான இன்விடேஷனல் வாலிபால் போட்டி, பள்ளி வளாகத்தில் நடந்தது.
மாணவர் மற்றும் மாணவியருக்கான போட்டியின், மாணவர் பிரிவில் 29 அணிகள் மற்றும் மாணவியர் பிரிவில் 23 அணிகள் என 50க்கும் மேற்பட்ட அணிகள், நாக் அவுட் மற்றும் லீக் முறைப்படி போட்டியிட்டன.
இதன் மாணவியர் பிரிவு லீக் சுற்றில், இருகூர் அரசு பள்ளி, ஏ.பி.சி., பள்ளி, சி.எம்.எஸ்., மெட்ரிக்., மற்றும் எஸ்.வி.ஜி.வி., அணிகள் போட்டியிட்டன.
லீக் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று, இருகூர் அரசு பள்ளி அணி முதலிடத்தை பிடித்தது.
தொடர்ந்து, ஏ.பி.சி., பள்ளி அணி இரண்டு வெற்றிகளுடன் இரண்டாமிடத்தையும், எஸ்.வி.ஜி.வி., அணி ஒரு வெற்றியுடன், மூன்றாமிடத்தையும் பிடித்தது.
மாவட்ட அளவிலான போட்டியில், வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவியரை இருகூர் அரசு பள்ளி தலைமையாசிரியை ரத்தினசெல்வி, உடற்கல்வி ஆசிரியர்கள் கண்ணன், தேவ பிரியா ஆகியோர் பாராட்டினர்.