/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'வாக்கிங்' செல்ல முடியாமல் அவஸ்தை குப்பை கூடாரமாக இருந்தால் எப்படி நடப்பது? 'வாக்கிங்' செல்ல முடியாமல் அவஸ்தை குப்பை கூடாரமாக இருந்தால் எப்படி நடப்பது?
'வாக்கிங்' செல்ல முடியாமல் அவஸ்தை குப்பை கூடாரமாக இருந்தால் எப்படி நடப்பது?
'வாக்கிங்' செல்ல முடியாமல் அவஸ்தை குப்பை கூடாரமாக இருந்தால் எப்படி நடப்பது?
'வாக்கிங்' செல்ல முடியாமல் அவஸ்தை குப்பை கூடாரமாக இருந்தால் எப்படி நடப்பது?
ADDED : ஜூன் 03, 2024 01:41 AM

கோவை;சாய்பாபாகாலனி, ராமலிங்கா நகர் மாநகராட்சி பூங்கா பராமரிக்கப்படாமல், குப்பை கூடாரமாக காட்சியளிப்பதுடன் 'கேட்' பூட்டப்படாததால், இரவு நேரத்தில்சமூக விரோத செயல்களும் நடக்கின்றன.
மாநகராட்சி மேற்கு மண்டலம், 44வது வார்டு சாயிபாபாகாலனி, சர்ச் ரோடு அடுத்த ராமலிங்கா நகரில், 240 குடியிருப்புகள் உள்ளன.
இங்கு குழந்தைகளுக்கென்று, 45 சென்ட் இடத்தில் மாநகராட்சி சிறுவர் பூங்கா, பெரியவர்கள் நடைபயிற்சிக்கென்று, 1 ஏக்கரில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
மரங்களால் பசுமையுடன் காட்சியளித்த இப்பூங்காக்கள், பராமரிக்கப்படாததால் பொலிவிழந்து காட்சியளிக்கின்றன. வெட்டப்பட்ட மரக்கிளைகள் அங்கேயே வீசப்பட்டுள்ளதுடன், புற்கள் வளர்ந்து பராமரிப்பற்று காட்சியளிக்கிறது.
ராமலிங்கா நகர் குடியிருப்போர் நலச்சங்க செயலாளர் விஜயராகவன் கூறியதாவது:
ராமலிங்கா நகரில் உள்ள சிறுவர் பூங்கா, பெரியவர்களுக்கான மாநகராட்சி பூங்கா இருமாதங்களுக்கும் மேலாக பராமரிக்கப்படுவதில்லை. மரம், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றப்படாததால் கருகி வருகின்றன.
தினமும் காலையில், 100க்கும் மேற்பட்டோர் நடைபயிற்சி மேற்கொண்டு வந்தனர். தற்போதுவருவதற்கே தயங்குகின்றனர். மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை.
நாங்கள்தான் அவ்வப்போது குப்பை எடுத்து, தண்ணீர் ஊற்றி பராமரிக்கிறோம். கடந்த மார்ச், 31ம் தேதியுடன் ஒப்பந்ததாரருக்கு பராமரிப்பு பணி முடிந்துவிட்டது.
அருகே, குழந்தைகள் பூங்கா, 40 சென்ட் உள்ளது; அதுவும் பராமரிக்கப்படுவதில்லை. 'கேட்' பூட்டப்படாததால் இரவு நேரங்களில் சமூகவிரோத செயல்களும் நடக்கின்றன. மாநகராட்சி நிர்வாகம் இதற்கு தீர்வுகாண வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
இதுகுறித்து தகவல்பெற, மேற்கு மண்டல உதவி கமிஷனர் சந்தியாவை பலமுறை தொடர்பு கொண்டும், போன் அழைப்பை அவர் ஏற்கவில்லை.