Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இரவில் பெண்கள் 'பக் பக்'

இரவில் பெண்கள் 'பக் பக்'

இரவில் பெண்கள் 'பக் பக்'

இரவில் பெண்கள் 'பக் பக்'

ADDED : ஜூன் 03, 2024 01:41 AM


Google News
Latest Tamil News

சேதமடைந்த சாக்கடை


மேட்டுப்பாளையம் ரோடு, ஜி.என்.மில்ஸ், பி.எஸ்.என்.எல்., குடியிருப்பு வளாகம் அருகே, சாக்கடை கால்வாய் மோசமாக சேதமடைந்துள்ளது. கழிவுநீர் செல்ல வழியின்றி, ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. குடியிருப்பு பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

- நமச்சிவாயம்,ஜி.என்.மில்ஸ்.

தெருவிளக்கு பழுது


ராமநாதபுரம், 64வது வார்டு, ஐயப்பன் கோவில் அருகே, சாம நாயுடு லே-அவுட்டில், 'பி -8' என்ற எண் கொண்ட கம்பத்தில், கடந்த சில நாட்களாக தெருவிளக்கு எரியவில்லை. இதனால், இரவு 7:00 மணிக்கு மேல், வெளியே செல்ல முடியவில்லை.

- ராஜா, ராமநாதபுரம்.

சுகாதார சீர்கேடு


ஆர்.எஸ்.புரம், தடாகம் ரோடு, பால் கம்பெனி அருகில், சாக்கடை கால்வாயின் இருபக்க சுற்றுச்சுவரும் இடிந்த நிலையில் உள்ளது. மண் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அடைத்து கழிவுநீர் தேங்கி நிற்கிறது. திறந்த நிலை சாக்கடையால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

- ஆர்.எஸ்.புரம்.

மின்மாற்றி சேதம்


கோவைப்புதுார், பஸ் டெர்மினல் அருகே, மின்மாற்றியின் இருபக்க கம்பமும் மோசமாகசேதமடைந்துள்ளது. துாண்களின் கான்கிரீட் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன. ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றியை, உடனடியாக மாற்றியமைக்க வேண்டும்.

- சுசீலா, கோவைப்புதுார்.

பாதுகாப்பற்ற சூழல்


ஆவாரம்பாளையம், ராமசாமி லே-அவுட், ஸ்ரீ பகவதி டூல்ஸ் கடை அருகே, 'பி-12' என்ற எண் கொண்ட கம்பத்தில், தெருவிளக்கு கடந்த ஒரு வாரமாக எரியவில்லை. இதனால், குடியிருப்பு பகுதியில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. விரைந்து பழுதான விளக்கை சரிசெய்ய வேண்டும்.

- ராஜா, ஆவாரம்பாளையம்.

புதிய குப்பை கிடங்கு


விளாங்குறிச்சி, ஒன்பதாவது வார்டு, காமாட்சி அம்மன் கோவில் வீதியின் கடைசியில், பல மாதங்களாக திறந்தவெளியில் குப்பை கொட்டப்படுகிறது. குப்பை குவிந்து, குப்பை கிடங்காய் மாறிவருகிறது. குப்பையை அகற்றுவதுடன், மீண்டும் கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- நிர்மல்குமார், விளாங்குறிச்சி.

ஆபத்தான மரம்


போத்தனுார், மேட்டூர், மூரண்டம்மன் கோவில் அருகில், மரம் ஒன்று ஆபத்தான நிலையில் உள்ளது. மரத்தின் கிளைகள் காய்ந்து, அவ்வப்போது முறிந்து சாலையில் விழுகின்றன. பக்தர்களுக்கு ஆபத்தாகவுள்ள இந்த மரத்தை, பாதுகாப்பாக அகற்ற வேண்டும்.

- கார்த்திக், போத்தனுார்.

காத்திருக்கும் கழிவுகள்


பாப்பநாயக்கன்பாளையம், காய்கடை பேருந்து நிறுத்தம் அருகே, சாக்கடை கால்வாயை சுத்தம் செய்து, கழிவுகளை சாலையிலேயே போட்டுள்ளனர். இதனால், நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

- வேலுச்சாமி, பாப்பநாயக்கன்பாளையம்.

வீணாகும் குடிநீர்


கோவைப்புதுார் பஸ் டெர்மினல் அருகே,குடிநீர் குழாய் உடைந்து பெருமளவு தண்ணீர் வீணாகிறது. சாலையில் உள்ள குழியில், தண்ணீர் தேங்கி நிற்கிறது. வாகனங்கள் செல்லும் போது தண்ணீர் பாதசாரிகள் மீது தெறிக்கிறது. வாகன ஓட்டிகள்தடுமாறி விழுகின்றனர்.

- சந்திரமோகன், கோவைப்புதுார்.

ஒன்பது மாதமாக எரியாத விளக்கு


கோவை மாநகராட்சி, 24வது வார்டு, லட்சுமி நகரில், கம்பம் எண் 21, 22, 23, 24 ஆகியவற்றில், கடந்த ஒன்பது மாதங்களாக, தெருவிளக்கு எரியவில்லை. பணி முடிந்து வீடு திரும்பும் பெண்கள், இரவுப்பணி முடிந்து வருவோர் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

- செல்வி, 24வது வார்டு.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us