Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அதிக மகசூல் தரும் கோ32, கே12 ரக சோளம் 

அதிக மகசூல் தரும் கோ32, கே12 ரக சோளம் 

அதிக மகசூல் தரும் கோ32, கே12 ரக சோளம் 

அதிக மகசூல் தரும் கோ32, கே12 ரக சோளம் 

ADDED : ஜூலை 05, 2024 02:42 AM


Google News
கோவை:கோடை உழவு முடிந்துள்ள நிலையில், வரும் பட்டத்துக்கு கே12 மற்றும் கோ32 ரக சோளத்தில் அதிக மகசூல் கிடைக்கும் என வேளாண்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வேளாண் இணை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

கோவை மாவட்டத்தில் சுமார் 79,740.97 ஏக்கர் (30,270 எக்டர்) பரப்பளவில் சோளம், கம்பு மற்றும் ராகி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. நடப்பு ஆண்டில் ஆடி, ஆவணி மாதங்களில் சோளம் சாகுபடி செய்ய ஏதுவாக, கோடை உழவு மற்றும் மறு உழுவு செய்து வயல்கள் தயார் நிலையில் உள்ளன. எதிர்வரும் காலநிலைக்கு ஏற்றவாறு கோ32 மற்றும் கே12 சோள ரகங்களை பயன்படுத்த விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்துகிறது

கோ 32 ரகம்: இந்த ரக சோளம், -110 நாட்கள் வயதுடையது. இரவை மற்றும் மானாவாரி சாகுபடிக்கு ஏற்றது. இதில், 14.66 சதவீதம் புரதம், 5.8 சதவீதம் நார்ச்சத்து உள்ளது. இது, 2.5 ஏக்கருக்கு 3,100 கிலோ தானிய மகசூல் தருகிறது. 11.453 கிலோ தட்டு மகசூல் கிடைக்கும்.

கே 12 ரகம்: மானாவாரிக்கு ஏற்ற இந்த ரகம், 2.5 ஏக்கருக்கு 3500 கிலோ தானிய மகசூல் தருகிறது. 25 ஏக்கருக்கு, 10 கிலோ என்ற கணக்கில் விதை தேவைப்படும்.

மேலும், ஒரு எக்டருக்கு (2.5 ஏக்கர்) சூடோமோனாஸ் புளூரசென்ஸ்- 50 சதவீதம் அல்லது ரூ.500, திரவ உயிர் உரங்கள் 50 சதவீதம் அல்லது ரூ. 300,- தானிய நுண்ணுாட்டக்கலவை 50 சதவீதம் அல்லது ரூ. 500 என்ற அளவில் மானியத்தில் வழங்கப்படுகிறது. மேலும், தகவல் அறிய தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்க திட்ட ஆலோசகரை 99449 77561 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us