/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரசம்பாளையம் பிரிவில் குப்பை குவிப்பதால் அவதி அரசம்பாளையம் பிரிவில் குப்பை குவிப்பதால் அவதி
அரசம்பாளையம் பிரிவில் குப்பை குவிப்பதால் அவதி
அரசம்பாளையம் பிரிவில் குப்பை குவிப்பதால் அவதி
அரசம்பாளையம் பிரிவில் குப்பை குவிப்பதால் அவதி
ADDED : ஜூலை 05, 2024 02:20 AM

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, அரசம்பாளையம் பிரிவு அருகே குப்பை குவிக்கப்படுவதால், பொதுச்சுகாதாரம் பாதித்து மக்கள் அவதிப்படுகின்றனர்.
பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், கிணத்துக்கடவு மேம்பாலம் முடியும் இடத்தில், அரசம்பாளையம் பிரிவு அருகே ரோட்டோரத்தில் குப்பை குவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரோட்டில் செல்பவர்கள் சிலர் பைக்கில் செல்லும் போது, குப்பையை இங்கு வீசி செல்கின்றனர். சிலர் இங்கு உள்ள குடியிருப்புகளில் இருந்து கொண்டு வந்து குப்பையை கொட்டி செல்கின்றனர். குப்பை குவிந்து கிடப்பதால், துர்நாற்றம் வீசுகிறது. பொதுச்சுகாதாரம் பாதிக்கிறது.
ரோட்டில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் மீது, காற்றுக்கு பறந்து குப்பை விழுகிறது. இதனால், வாகன ஓட்டுநர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இங்கு உள்ள குப்பையை அகற்றி, இடத்தை சுத்தம் செய்து, குப்பை தொட்டி வைத்து முறையாக குப்பையை அகற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.