Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆனந்த சாயி கோவிலில் குரு பூர்ணிமா உற்சவம்

ஆனந்த சாயி கோவிலில் குரு பூர்ணிமா உற்சவம்

ஆனந்த சாயி கோவிலில் குரு பூர்ணிமா உற்சவம்

ஆனந்த சாயி கோவிலில் குரு பூர்ணிமா உற்சவம்

ADDED : ஜூலை 13, 2024 08:37 AM


Google News
உடுமலை : உடுமலை சீரடி ஸ்ரீ ஆனந்தசாயி கோவிலில், குரு பூர்ணிமா உற்சவம் வரும் 19ம் தேதி நடக்கிறது.

உடுமலை தில்லை நகரில் சீரடி ஸ்ரீ ஆனந்தசாயி கோவில் உள்ளது. இக்கோவிலில், குரு பூர்ணிமா உற்சவம் மற்றும் 11ம் ஆண்டு விழா வரும் 19ம் தேதி துவங்குகிறது.

அன்று காலை, 5:30 மணிக்கு காக்கட ஆரத்தியும், காலை, 7:00 மணிக்கு ஸ்ரீ கணபதி ேஹாமும், 11:30 மணிக்கு சாய்சத்ரிதம் பாராயணமும், மாலையில் திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது.

வரும் 20ம் தேதி, காலை, 8:30 மணிக்கு அபிேஷகம், அலங்காரமும், காலை, 10:00 மணிக்கு விஷ்ணுசகஸ்ரநாய பாராயணமும், காலை, 10:30 மணிக்கு சீரடி ஸ்ரீ ஆனந்த சாயி நாதருக்கு 108 வலம்புரி சங்காபிேஷகமும் நடக்கிறது.

விழாவில் வரும் 21ம் தேதி குருபூர்ணிமா விழா நடக்கிறது. அன்று, காலை, 7:00 மணிக்கு 16 வகை சிறப்பு அபிேஷகங்களும், மதியம் அன்னதானமும், மாலையில், திருவீதி உலா - ஸ்ரீ சாய்நாதர் தேர் பவனியும், வாண வேடிக்கையும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, சீரடி ஸ்ரீ ஆனந்தசாயி கோவில் மற்றும் அறக்கட்டளை அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us