Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உலக மக்கள் தொகை தின கொண்டாட்டம்  கர்ப்பிணிகளுக்கு டாக்டர்கள் அறிவுரை

உலக மக்கள் தொகை தின கொண்டாட்டம்  கர்ப்பிணிகளுக்கு டாக்டர்கள் அறிவுரை

உலக மக்கள் தொகை தின கொண்டாட்டம்  கர்ப்பிணிகளுக்கு டாக்டர்கள் அறிவுரை

உலக மக்கள் தொகை தின கொண்டாட்டம்  கர்ப்பிணிகளுக்கு டாக்டர்கள் அறிவுரை

ADDED : ஜூலை 13, 2024 08:37 AM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி, : பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மாவட்ட குடும்ப நலத்துறை சார்பில், உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்பட்டது.

விழாவில், தாய்மார்களுக்கு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் (பொறுப்பு) டாக்டர் கார்த்திகேயன் மற்றும் மகப்பேறு துறையின் தலைவர் டாக்டர் ராஜேஸ்வரி, டாக்டர் ராஜாத்தி, மகப்பேறு உதவியாளர் குணவதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஒவ்வொரு தம்பதியரின் பெருமை, குடும்ப நலம்-, இதுவே வளர்ந்த இந்தியாவின் புதிய அடையாளம், என்ற இந்த ஆண்டின் 'தீம்' குறித்து தெரிவிக்கப்பட்டது. குடும்ப கட்டுப்பாட்டு முறைகள் பள்ளி தாய்மார்களுக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.

டாக்டர்கள் கூறியதாவது:

சட்டப்படி திருமண வயது 18, அதற்கு முன்னதாக இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்ளக் கூடாது. இளம் வயதில் திருமணம் செய்தால் உடலில் பாதிப்புகள் ஏற்படும்.

முதல் குழந்தை பிறந்த பின், இரண்டு ஆண்டுகள் கழித்தே இரண்டாவது குழந்தை பிறக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் கருத்தரிப்பு ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இதனால், அடுத்ததாக பிறக்கும் குழந்தை எடை குறைவாக சத்து குறைவாக பிறப்பதற்கு வாய்ப்பு இல்லை.

அரசு மருத்துவமனைகளில், மகப்பேறு மருத்துவர்கள் வாயிலாக இலவசமாக மருத்துவ காரணங்களுக்காக கருக்கலைப்பு செய்யப்படுகிறது. இரண்டு குழந்தை பிறந்த பிறகு அறுவை சிகிச்சை வாயிலாக, குடும்ப கட்டுப்பாடு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்படுகிறது.

'நாம் இருவர் நமக்கு இருவர்', என, இரண்டு குழந்தைகளுடன் தாய், தந்தை அந்த குழந்தைகளை சிறப்பாக வளர்க்க வேண்டும்.

இவ்வாறு, டாக்டர்கள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us