/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பசுந்தாள் பயிர் சாகுபடி செய்து மண்வளத்தை பெருக்கலாம் பசுந்தாள் பயிர் சாகுபடி செய்து மண்வளத்தை பெருக்கலாம்
பசுந்தாள் பயிர் சாகுபடி செய்து மண்வளத்தை பெருக்கலாம்
பசுந்தாள் பயிர் சாகுபடி செய்து மண்வளத்தை பெருக்கலாம்
பசுந்தாள் பயிர் சாகுபடி செய்து மண்வளத்தை பெருக்கலாம்
ADDED : ஜூன் 23, 2024 10:47 PM
பெ.நா.பாளையம்:பசுந்தாள் உர பயிர்களை சாகுபடி செய்து, மண்வளத்தை மேம்படுத்தலாம் என, வேளாண்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
பசுந்தாள் உரப்பயிர்கள் சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு, 20 கிலோ பசுந்தாள் விதைகளை விதைக்க வேண்டும். பின்னர் நன்கு வளர்த்தவுடன், 45 நாட்களில் பூ பூக்கும் தருணத்தில் பசுந்தாள் உரப்பயிர்களை மடக்கி, உழவு செய்திட வேண்டும். பசுந்தாள் உரப்பயிர்கள் வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜன்களை கிரகித்து, வேர் முடிச்சுகளில் ரைசோபியம் என்ற நுண்ணுயிர்களின் துணையுடன் நிலை நிறுத்துகின்றன.
பசுந்தாள் உரப்பயிர்களை மடக்கி உழவு செய்வதனால், தொடர்ந்து பயிரிடப்படும் பயிர்களுக்கு தழைச்சத்து கிடைக்கிறது. இவ்வாறு மடக்கி உழவு செய்த வயல்களில், அங்கக சத்து அதிகமாகும். இதனால் மண்ணில் நுண்ணுயிர்கள் பெருக்கம் அதிகமாகி, மண் வளம் மேம்படுகிறது. பயிர்கள் சாகுபடிக்கு மண்ணுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பசுந்தாள் உரப்பயிர்கள் தரக்கூடியது.
மண்ணில் வாழும் நுண்ணுயிர்களுக்கு உணவாக பயன்படுகிறது. மண்ணின் பௌதீக மற்றும் ரசாயன தன்மைகளை மேம்படுத்துகிறது. மண் அரிப்பு தடுக்கப்படுகிறது. மண்ணில் நீர் பிடிப்பு திறனை மேம்படுத்துகிறது. மேலும், களைகளின் வளர்ச்சிகளை கட்டுப்படுத்த பயன்படுகிறது என, வேளாண்துறையினர் கூறினர்.