/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாட்டு வண்டிக்கு வழிவிடுங்க: நெடுஞ்சாலையில் தவிப்பு மாட்டு வண்டிக்கு வழிவிடுங்க: நெடுஞ்சாலையில் தவிப்பு
மாட்டு வண்டிக்கு வழிவிடுங்க: நெடுஞ்சாலையில் தவிப்பு
மாட்டு வண்டிக்கு வழிவிடுங்க: நெடுஞ்சாலையில் தவிப்பு
மாட்டு வண்டிக்கு வழிவிடுங்க: நெடுஞ்சாலையில் தவிப்பு
ADDED : ஜூலை 13, 2024 08:35 AM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகரில், போக்குவரத்து அதிகமுள்ள கோவை ரோட்டில், விவசாயி ஒருவர், மாட்டு வண்டியில் செல்ல முடியாமல் அவதிப்பட்டார்.
விவசாய நிலம் வைத்திருப்பவர்கள் அனைவரும், வண்டி இழுப்பதற்காகவே, மாடுகளை வளர்த்தனர். மோட்டார் வாகனங்கள் அதிகளவில் பயன்பாட்டில் இல்லாதபோது, விவசாயிகள் மட்டுமின்றி, வியாபாரிகளும் மாட்டு வண்டியையே நம்பி இருந்தனர்.
விவசாயிகள், வேளாண் விளை பொருட்களை ஏற்றிச் செல்ல அதிகமாக பயன்படுத்தியதும் மாட்டு வண்டியைத்தான். மோட்டார் வாகன போக்குவரத்து பெருகிய நிலையில், மாட்டு வண்டியை தற்போது காண்பதே அரிதாகி விட்டது. இருப்பினும், பொள்ளாச்சி நகரின் சுற்றுப்பகுதி கிராமங்களில், விவசாயிகள் சிலர், காளை வளர்ப்பில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சிலர் சவாரி வண்டியில் அவ்வப்போது காளைகளை பூட்டி, ஓட்டிச்சென்று பயிற்சி அளிக்கின்றனர்.
முந்தைய காலத்தில் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட சவாரி வண்டிகள், தற்போது ஒரு சிலரின் ஹாபியாகி விட்டது. சமீபத்தில், பொள்ளாச்சி - கோவை ரோட்டில், போக்குவரத்து அதிகம் இருந்த நேரத்தில், மாட்டு வண்டியில் வந்த விவசாயி ஒருவர், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஆனால், அவரால் ரோட்டை உடனடியாக கடந்து செல்ல முடியவில்லை.
ஹாரன் அடித்தவாறு, மோட்டார் வாகனங்கள் சீறிப்பாய்ந்து சென்றதால், சில நிமிடங்கள் காத்திருந்து, ரோட்டை கடந்து செல்ல முடிந்தது.