/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இலவச வீட்டு மனை பட்டா கொடுங்க; ஊராட்சி நிர்வாகம் சார்பில் மனு இலவச வீட்டு மனை பட்டா கொடுங்க; ஊராட்சி நிர்வாகம் சார்பில் மனு
இலவச வீட்டு மனை பட்டா கொடுங்க; ஊராட்சி நிர்வாகம் சார்பில் மனு
இலவச வீட்டு மனை பட்டா கொடுங்க; ஊராட்சி நிர்வாகம் சார்பில் மனு
இலவச வீட்டு மனை பட்டா கொடுங்க; ஊராட்சி நிர்வாகம் சார்பில் மனு
ADDED : ஜூன் 27, 2024 09:53 PM
உடுமலை : விருகல்பட்டி ஊராட்சியில் வசிக்கும் தகுதியுள்ள மக்களுக்கு, இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகம் சார்பில், ஜமாபந்தியில் மனு கொடுத்தனர்.
குடிமங்கலம் ஒன்றியம், விருகல்பட்டி ஊராட்சியில், விருகல்பட்டி, புதுார், பழையூர், மரிக்கந்தை கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் வசிக்கும் வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகம் சார்பில், உடுமலை தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்த ஜமாபந்தியில் மனு கொடுத்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது: மரிக்கந்தை காந்திநகரில், 250க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அங்கு, ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ், ஏற்கனவே இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் காலியிடமும் உள்ளது. அங்கு தகுதியான நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நீண்ட காலமாக மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதே போல், விருகல்பட்டியில் நத்தம் புறம்போக்கு நிலம் உள்ளது.
அப்பகுதியில் வீடு இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க பல முறை தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். இதே போல், புதுார் கிராமத்தில், பட்டா வழங்குவதற்கான இடத்தை கண்டறிந்து பயனாளிகளுக்கு பட்டா வழங்க வேண்டும்.
நீண்ட காலமாக இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படாததால், மக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.