/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ புது பஸ் ஸ்டாண்டில் தேங்கும் குப்பை புது பஸ் ஸ்டாண்டில் தேங்கும் குப்பை
புது பஸ் ஸ்டாண்டில் தேங்கும் குப்பை
புது பஸ் ஸ்டாண்டில் தேங்கும் குப்பை
புது பஸ் ஸ்டாண்டில் தேங்கும் குப்பை
ADDED : ஜூன் 27, 2024 09:53 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சி புது பஸ் ஸ்டாண்டில் குப்பை குவிந்து கிடப்பதால் பயணியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பொள்ளாச்சி நகராட்சி புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, கிராமப்புறங்கள் மற்றும் கேரள மாநிலத்துக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும், உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் இருந்தும் அதிகளவு சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், பஸ் ஸ்டாண்டில் சுகாதாரமின்றி கிடப்பதாலும், துர்நாற்றம் வீசுவதாலும் பயணியர் முகம் சுளிக்கின்றனர்.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பொள்ளாச்சி நகராட்சி புது பஸ் ஸ்டாண்ட்டில், குப்பை குவிந்து கிடக்கின்றன. அங்குள்ள குப்பை தொட்டிகளிலும் குப்பை அதிகளவு குவிந்து இருப்பதால், சுகாதாரம் பாதிக்கிறது. கடும் துர்நாற்றம் வீசுவதால் பயணியர் அவதிப்படுகின்றனர்.
பஸ்சிற்காக காத்திருக்கும் மக்கள் மூக்கை பிடித்தபடி காத்திருக்கும் நிலை உள்ளது. நகராட்சி முழுவதும் குப்பை பிரச்னைக்கு தீர்வு காணப்படாத நிலையில், பஸ் ஸ்டாண்டிலும் இந்த நிலை நிலவுவதால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி குப்பை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.