/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நீர் வழிப் பாதையில்குவியும் குப்பை நீர் வழிப் பாதையில்குவியும் குப்பை
நீர் வழிப் பாதையில்குவியும் குப்பை
நீர் வழிப் பாதையில்குவியும் குப்பை
நீர் வழிப் பாதையில்குவியும் குப்பை
ADDED : ஜூன் 16, 2024 11:21 PM

அன்னுார்;அன்னுாரில் 119 ஏக்கர்பரப்பளவில் குளம் உள்ளது. அத்திக்கடவு திட்டத்தில், சோதனை ஓட்டம் மற்றும் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பரில் பெய்த மழையில் குளத்தில் 50 சதவீதம் நீர் உள்ளது.
இந்நிலையில் குளத்தின் வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் குப்பை கொட்டப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்து உள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில்,' ஒட்டர்பாளையம் ஊராட்சி நிர்வாகம் குளத்தின் வடக்கு மற்றும் மேற்கு பகுதியிலும் நீர் வழிப் பாதையிலும் குப்பைகளை கொட்டுகிறது.
இதனால் இங்கு நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது. கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.