/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விதைகளை காப்பதில் பஞ்ச கவ்யாவின் பயன்கள் விதைகளை காப்பதில் பஞ்ச கவ்யாவின் பயன்கள்
விதைகளை காப்பதில் பஞ்ச கவ்யாவின் பயன்கள்
விதைகளை காப்பதில் பஞ்ச கவ்யாவின் பயன்கள்
விதைகளை காப்பதில் பஞ்ச கவ்யாவின் பயன்கள்
ADDED : ஜூன் 16, 2024 11:20 PM
பெ.நா.பாளையம்:விதைகளை காப்பதில், பஞ்சகவ்யாவின் பயன்கள் குறித்து முன்னோடி விவசாயிகள் அறிவுரை கூறினர்.
விதைகளை விதைப்பதற்கு முன்பு பஞ்சகவ்யாவில் நனைத்து, நிழலான இடத்தில் உலர வைக்க வேண்டும். இதை நிலத்தில் விதைக்கும் போது, பயிர்கள் நன்கு விளையும். பத்து லிட்டர் தண்ணீருக்கு, 300 மி.லி., பஞ்சகவ்யா கலக்க வேண்டும்.
நெல், சோளம் உள்ளிட்ட கடினமான விதைகளை பஞ்ச கவ்யாவில், 24 மணி நேரம் ஊற வைத்த பின், விதைப்பது நல்லது. இதனால் விதைகளின் முளைப்புத்திறன் கூடுவதோடு, நாற்றுகளும் நன்கு வாளிப்பாக இருக்கும். அதிகமான எண்ணிக்கையில் வேர்கள் பிடிக்கும். பூச்சிகளோ, நோய்களோ தாக்கும் வாய்ப்பு குறைவு.
வறட்சியை தாங்கி, பயிர்கள் நன்கு வேகமாக வளரும். பூஞ்ஞனம், வைரஸ், வேர்ப்புழுக்கள் பயிர்களை தாக்காது. நெல், தக்காளி, கத்தரி விதைகளை, வாழைக்கன்றுகளை பஞ்சகவ்யா கரைசலில் நனைத்தும் நடலாம்.
அடுத்த பருவத்துக்கான விதைகளை பஞ்ச காவ்யா கரைசலில் நனைத்து, நிழலில் உலர்த்தி பத்திரமாக எடுத்து வைப்பதால், விதைகளை சேமிக்கும் பணியும் தீரும் என, முன்னோடி விவசாயிகள் கூறினர்.