/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உடல்நலம் குன்றிய யானைக்கு விடுதலை! வனத்துறையினரின் ஆனந்தத்துக்கு எல்லையே இல்லை உடல்நலம் குன்றிய யானைக்கு விடுதலை! வனத்துறையினரின் ஆனந்தத்துக்கு எல்லையே இல்லை
உடல்நலம் குன்றிய யானைக்கு விடுதலை! வனத்துறையினரின் ஆனந்தத்துக்கு எல்லையே இல்லை
உடல்நலம் குன்றிய யானைக்கு விடுதலை! வனத்துறையினரின் ஆனந்தத்துக்கு எல்லையே இல்லை
உடல்நலம் குன்றிய யானைக்கு விடுதலை! வனத்துறையினரின் ஆனந்தத்துக்கு எல்லையே இல்லை
ADDED : ஜூன் 04, 2024 01:10 AM
வடவள்ளி;மருதமலை வனப்பகுதியில், உடல்நலக்குறைவு காரணமாக, வனத்துறையினர் சிகிச்சை அளித்து வந்த, 40 வயது பெண் யானையை, நேற்று வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.
கோவை வனச்சரகத்திற்குட்பட்ட மருதமலை வனப்பகுதியில், கடந்த, மே 30ம் தேதி, உடல் நலம் குன்றிய நிலையில் தரையில் படுத்துக்கிடந்த பெண் யானையுடன், ஒரு குட்டி யானையும் இருந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, பெண் யானைக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர்.
கடந்த, மே 31ம் தேதி, பெண் யானையின் உடல் நலத்தில் முன்னேற்றம் காணப்பட்டதால், ஜே.சி.பி., இயந்திரத்தின் உடதவியுடன், பெண் யானையை நிற்க வைத்தனர். தொடர்ந்து, யானைக்கு சிகிச்சை அளித்து, உணவும் வழங்கி வந்தனர். இரண்டு நாட்களாக, தாயுடன் இருந்த குட்டி யானை, கடந்த, 1ம் தேதி, தனது அண்ணனான, 10 வயதுடைய யானையுடன், வனப்பகுதிக்குள் சென்றது.
இதனையடுத்து, குட்டி யானையை, வனத்துறையினர் ஒரு நாள் முழுவதும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், 1ம் தேதி, இரவு, குட்டியானை, மீண்டும் தாயிடம் வந்து, 2 மணி நேரம் இருந்துவிட்டு, மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.
கடந்த 4 நாட்களாக வனத்துறையினர் தொடர்ந்துசிகிச்சை அளித்து வந்ததால், பெண் யானை உடல் நலம் தேறியது. இந்நிலையில், 5ம் நாளான நேற்று, பெண் யானை நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததால், வனத்துறையினர், பெண் யானையை, ஜே.சி.பி., இயந்திரத்தில் கட்டியிருந்த கயிற்றை கழற்றி விடுவித்தனர்.
அதன்பின், பெண் யானை, மீண்டும் அடர் வனப்பகுதிக்குள் சென்றது. உடல் நலம் குன்றி, எழுந்து நிற்க முடியாத நிலையில் இருந்த பெண் யானை, தொடர்ந்து சிகிச்சைக்குபின், ஆரோக்கியம் பெற்று, மீண்டும் தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியதால், அனைவரும் ஆனந்தமடைந்தனர்.
யானையை, இரவு, பகலாக கண்காணித்து, சிகிச்சை அளித்த வனத்துறையினருக்கு, பலதரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.