/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தமிழகத்தில் 24 இடங்களில் இலவச ஈஷா யோகா வகுப்பு தமிழகத்தில் 24 இடங்களில் இலவச ஈஷா யோகா வகுப்பு
தமிழகத்தில் 24 இடங்களில் இலவச ஈஷா யோகா வகுப்பு
தமிழகத்தில் 24 இடங்களில் இலவச ஈஷா யோகா வகுப்பு
தமிழகத்தில் 24 இடங்களில் இலவச ஈஷா யோகா வகுப்பு
ADDED : ஆக 05, 2024 06:41 AM

தொண்டாமுத்தூர் : ஈஷா அறக்கட்டளை சார்பில், தமிழகத்தில் முதல் முறையாக வரும், 7 முதல் 13ம் தேதி வரை 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு, இலவச ஈஷா யோகா வகுப்பு வழங்கப்பட உள்ளது.
இவ்வகுப்புகள் தமிழகம் முழுவதும், 24 இடங்களில் நடக்க உள்ளது. ஒரு நாளில் இரு வேளைகள் நடக்கவுள்ளது. யோகா வகுப்புகளில், ' ஷாம்பவி மஹா முத்ரா' எனும் சக்தி வாய்ந்த பயிற்சி கற்று தரப்படுகிறது.
இந்த யோகா பயிற்சி, மக்களின் உள்நிலை நல்வாழ்விற்காக, உண்மையான யோக அறிவியலின் அடிப்படைகளில் இருந்து, சத்குருவால் வடிவமைக்கப்பட்டது.
இந்த வகுப்பில் இலவசமாக பங்கேற்க விரும்பும் இளைஞர்கள், isha.co/youth-iyp என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.