/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பக்தர்கள் கோஷத்துடன் ட்ரோனில் உலா வந்த அம்மன் பக்தர்கள் கோஷத்துடன் ட்ரோனில் உலா வந்த அம்மன்
பக்தர்கள் கோஷத்துடன் ட்ரோனில் உலா வந்த அம்மன்
பக்தர்கள் கோஷத்துடன் ட்ரோனில் உலா வந்த அம்மன்
பக்தர்கள் கோஷத்துடன் ட்ரோனில் உலா வந்த அம்மன்
ADDED : ஆக 05, 2024 06:44 AM

சூலுார் : சூலுார் அருகே பக்தர்களின், 'ஓம் சக்தி, பராசக்தி' கோஷத்துடன், ட்ரோனில் ஆகாய மார்க்கமாக பவனி வந்து அம்மன் அருள்பாலித்தார்.
கோவை மாவட்டம், சூலுார் அடுத்த கண்ணம்பாளையத்தில், மகாசக்தி மாகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆடிப்பெருக்கு, பூச்சாட்டு திருக்கல்யாண உற்சவம், ஆகாய தேர் திருவிழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
கடந்த, 27ம் தேதி இரவு, எல்லை காவல் தெய்வங்களுக்கு பொங்கல் வைத்தலுடன் பூச்சாட்டு விழா துவங்கியது. ஆக. 1ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. 2ம் தேதி மாலை, அலங்கரிக்கப்பட்ட அம்மன் உற்சவர், ட்ரோனில் வைக்கப்பட்டு, பக்தர்கள் கோஷத்துடன் முக்கிய வீதிகள் வழியாக ஆகாய தேர் பவனி நடந்தது.
'ஓம் சக்தி பராசக்தி' என, பக்தர்கள் கோஷமிட்டு அம்மனை வழிபட்டனர். புதிய முயற்சியாக, ட்ரோன் வாயிலாக அம்மன் ஊர்வலம் நடந்ததை கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.