/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 18 ஆயிரத்து 945 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் 'ரெடி' 18 ஆயிரத்து 945 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் 'ரெடி'
18 ஆயிரத்து 945 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் 'ரெடி'
18 ஆயிரத்து 945 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் 'ரெடி'
18 ஆயிரத்து 945 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் 'ரெடி'
ADDED : ஜூலை 26, 2024 10:59 PM

கோவை:கோவையில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலை பள்ளிகளில் பயிலும், 18 ஆயிரத்து, 945 பேருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன.
தமிழகத்தில், 2024-25ம் கல்வியாண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும், 2 லட்சத்து, 43 ஆயிரத்து, 782 மாணவர்களுக்கும், 3 லட்சத்து, 3,894 மாணவியருக்கும் என, 5 லட்சத்து, 47 ஆயிரத்து, 676 பேருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன.
கோவை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும், 152 மேல்நிலை பள்ளிகளில், 8,123 மாணவர்கள், 10 ஆயிரத்து, 882 மாணவியர் என, 18 ஆயிரத்து, 945 பேருக்கு விலையில்லா சைக்கிள்கள் தரப்படுகின்றன.
இந்நிலையில், ஒண்டிப்புதுார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும், 86 மாணவர்களுக்கும், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும், 159 மாணவியிருக்கும் என, 245 பேருக்கு நேற்று வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி விலையில்லா சைக்கிள்கள் வழங்கி துவக்கிவைத்தார்.
இதர பள்ளி மாணவர்களுக்கும் விலையில்லா சைக்கிகள் விரைவில் வழங்கப்படவுள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.